Transcript · Tamil
Tamil transcript
குதிரை பேரத்தில் எமது அரசு ஈடுபடுகிறது என்று கருத்தை தெரிவித்த மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு,
நான் ஒன்றை ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுகிற அரசே தவிர,
குதிரை பேரத்தில் ஈடுபடுகிற அரசு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து
இம்மி அளவு விலகாமல் நிச்சயமாக இந்த ஆட்சி நடைபெறும்.
எனவே நான் மொழிந்துள்ள இத்தீர்மானத்தை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும்
ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன்.
End of transcript · 62 words · machine translated