Transcript · Tamil → English
Tamil → English transcript
Our actions in this term of governance must be
such that more people receive more benefits.
Here, everyone is equal.
A...
Even if there are parties here that have only one member,
their views and the views expressed by the members of the Tamilaga Vetri Kazhagam,
அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும்
who are in greater number, must be given
நல்லவை ஏற்கப்பட்டு
and the bad ones rejected. This Assembly must function
ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும்.
Only someone who has the quality to conduct this Assembly,
has been unanimously chosen by the Tamilaga Vetri Kazhagam,
and you are seated in this Chair today.
Honorable Speaker of the Assembly, you have been unanimously elected as
தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.
தங்களை இந்த ஆசனத்தில் மாண்புமிகு பேரவை முன்னவரும்
Speaker The Leader of the Opposition also took them by the hand,
தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள்.
இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும்.
பெரிய வரலாறு இச்சம்பவத்தில் உள்ளது.
Our parliamentary procedures are similar to the procedures of the British
Parliament. Even in the days of the monarchy, their Parliament functioned.
In those days, there was a king who held all powers, and the Parliament also
பாராளுமன்றமும் இயங்கியது.
functioned. There, the king would want a certain task to be done. The Parliament
would mostly reject his wish. The news that the Parliament
மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை
மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்றத் தலைவர் ஸ்பீக்கர் என்பார்கள்.
The person who had to convey Parliament’s view to the king was the Speaker.
That required courage. Only to do certain acts
சில பணிகளை செய்வதற்குத் தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர
அந்த ராஜ்யத்தில் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.
தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு
death penalty. They will order,“ Cut off his head.”
தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள்.
Since this has happened many times, no one will want to
இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள்.
எனவே புதிதாக பாராளுமன்றம் அமையும் போது
and someone is announced for the Speaker’s post, he will just try to run away,
அவர் உடனே தலை தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்.
Then the leader of the House and the Leader of the Opposition will stop him,
hold his hands, drag him over and seat him in the chair.
This is the tradition that has come down from that time.
Even after the democratic system was established, this tradition continues.
Surely all the victorious Tamil Nadu association members will only be
helpful to you, that is the promise…
End of transcript · 412 words · machine translated
Original transcript (Tamil)
அதிகமான மக்கள் அதிக நன்மைகளை இந்த ஆட்சி காலத்தில் நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம். ஓர்... ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்றிருந்தாலும்
அவர்களுடைய கருத்துகளுக்கும் அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு நல்லவை ஏற்கப்பட்டு அல்லவை நிராகரிக்கப்பட்டு
ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும். அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு கொண்ட இப்பேரவையை நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையே தமிழக வெற்றிக் கழகம் மும்மொழிந்து தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில் மாண்புமிகு பேரவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கும்.
பெரிய வரலாறு இச்சம்பவத்தில் உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் நடைமுறைகளைப் போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும். மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்கு பாராளுமன்றம் இயங்கியுள்ளது. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார், பாராளுமன்றமும் இயங்கியது.
அங்கே மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்புவார். பாராளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்றத் தலைவர் ஸ்பீக்கர் என்பார்கள். பாராளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர்.
அதற்கு துணிவு வேண்டும். சில பணிகளை செய்வதற்குத் தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர அந்த ராஜ்யத்தில் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார்.
தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். எனவே புதிதாக பாராளுமன்றம் அமையும் போது ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன்
அவர் உடனே தலை தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் அவரைத் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது.
நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிகரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை...