Political Conflict in Andhra Pradesh
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண்
இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்தக் கூட்டணி
உடைய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவை ஆண்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகனை வீழ்த்த தெலுங்கு
தேச கட்சித் தலைவர் சந்திரபாபு ஜனசேனா கட்சித் தலைவர் பவன்
கல்யாண் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தனர்.
இந்தக் கூட்டணி 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.
தொடர்ந்து முதல்வராக சந்திரபாபு பொறுப்பேற்ற நிலையில் பவன் கல்யாண் துணை
முதல்வராகப் பொறுப்பேற்றார். இதன் காரணமாக ஆந்திராவில் செல்வாக்கு மிக்க
நபராகப் பவன் கல்யாண் உருவானார். இச் சூழலில் முதல்வர்
சந்திரபாபு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் இடையே மோதல் வெடித்திருப்பதாகச்
செய்திகள் வெளியாகின.
இருவருக்கும் அமைச்சரவை இலாக்காக்கள், அதிகாரிகள் நியமனம்
உள்ளிட்டவற்றில் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்பட்டது.
இதனால் முதல்வர் சந்திரபாபு கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகளைப் பவன் கல்யாண்
புறக்கணித்து வந்ததாகக் கூறப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தையும் பவன் கல்யாண்
புறக்கணித்திருந்தார்.
மேலும் சந்திரபாபுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷுக்கு
மாநில அரசியலிலும் அதிகாரிகள் மத்தியிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
துணை முதல்வரான தன்னைவிட நாரா லோகேஷுக்கு அளிக்கப்படும்
முக்கியத்துவம் பவன் கல்யாணுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும்
சொல்லப்படுகிறது.
மேலும் பவன் கல்யாணின் சகோதரர் நாகபாபுவுக்கு அமைச்சர் பதவி
வழங்குவதாகச் சந்திரபாபு வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால்
அதனை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகத் தனது துறையின் கீழ் வரும் Cabinet அந்தஸ்துடைய ஆந்திரா
Clean அமைப்பின் தலைவராகப் பவன் கல்யாண் நாகபாபுவை
நியமித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இது போன்ற காரணங்களால் இந்தக் கூட்டணி விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு
இருப்பதாக ஆந்திர மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
End of transcript · 196 words