Philosophical Questions about God
இறைவன் எங்கே இருக்கிறான்? அதுதான் என் முதற் கேள்வி.
மன்னா, இந்த பொற்கிண்ணத்தில் என்ன இருக்கிறது?
பொற்கிண்ணத்திலே பசுவின் பால் இருக்கிறது.
அந்த பாலுக்குள்ளே என்னென்ன இருக்கிறது?
பாலுக்குள்ளே மோர், தயிர், வெண்ணெய், நெய் அனைத்தும் இருக்கிறது.
அது எங்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டுங்கள்.
அது... அது... அதுக்குள்ளே இருக்கிறது.
ஆஹா! அப்படி சொன்னால் போதாது.
பாலுக்குள்ளே நெய், தயிர், வெண்ணெய், மோர் எங்கே இருக்கிறது என்று தனித்தனியாக சுட்டிக்காட்ட வேண்டும்.
ஹஹ்! இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி? அதற்குள்ளே எல்லாம் அடங்கி இருக்கிறது.
அப்படித்தானே! ஆண்டவன் எல்லா இடத்திலும் அடங்கி இருக்கிறான்.
இது புரியாமல், தாத்தாவிடம் இறைவன் எங்கே இருக்கிறான் என்று ஒரு கேள்வியைக் கேட்டீர்களே, இதற்கு எப்படி பதில் சொல்வது?
கண்முன்னே நிற்பது குழந்தையா? அல்லது குழந்தை வடிவிலே வந்த பெண்குலத்தின் தெய்வமா?
இல்லை, தெய்வத்தின் நாடகமா? அந்த நாடகத்தின் தத்துவத்தை விளக்க வந்த நாமகளின் பாத்திரமா?
அதற்குள் யோசிக்கப்பட வேண்டாம்.
மன்னா, மன்னா, அடுத்த கேள்வியைக் கேட்கலாம்.
இறைவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் என்னுடைய இரண்டாவது கேள்வி அம்மா.
இது என்ன? - தூங்கா விளக்கு.
இந்த விளக்கிலே சுடர்விட்டுக் கொண்டிருப்பது என்ன? - அணையா தீபம்.
இந்த தீபம் எந்த திசையை நோக்கி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா?
அது எப்படி முடியும்? எரியும் விளக்கிலே இருக்கும் தீபம் நாற்புறமும் ஒளியிட்டு பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும்.
அது எந்த திசையை நோக்கி பிரகாசிக்கிறது என்று கேட்டால், அதற்கு எப்படி பதில் கூற முடியும்?
அப்படித்தானே! இறைவன் எல்லா திசைகளையும் நோக்கிக் கொண்டிருக்கிறான்.
இது புரியாமல், எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டால், இதற்கு எப்படி பதில் சொல்வது?
ஆண்டவா! அரசனை குழந்தையாக்கி, குழந்தையை தெய்வமாக்கிக் கொண்டிருக்கிறாயே!
இச்சிறு பெண்ணிடமிருந்து விடைகளை நீயே சொல்வது உண்மையானால்,
என்னுள்ளிருந்து வினாக்களைக் கேட்க வைத்ததும் நீதானே!
End of transcript · 198 words