Discussion on Corruption and Governance

இன்னைக்கு டெக்கான் க்ரானிக்கல்ல ஒரு ஆர்டிகல் வந்திருக்கு.

டெக்கான் க்ரானிக்கலின் எடிட்டர் திரு ஆர். மோகன் அவர்கள் அதை எழுதியிருக்காரு.

நம்ம சென்னை டைரின்ற ஒரு வீக்லி காலம். அதுல அவரு என்ன சொல்றாருன்னா,

"ஊழலை ஒழிப்பேன் என்று முதல்வர் சொன்னதோடு செயலிலும் அதைச் செய்து காட்டியிருக்கிறார்."

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடந்த வாரம் தாசில்தாரைச் சந்திக்க தாலுகா ஆபீஸ்க்குச் சென்றார்.

தாசில்தார் அவரை அமர வைத்து ஒரு கப் காபியை வாங்கிக் கொடுத்து அவருடைய வேலையை முடித்துக் கொடுத்தார்.

"இதுபோல எனது வரலாற்றிலேயே நடந்ததில்லை" என்று அந்த நண்பர் சொன்னார்.

அவருக்குச் சொந்தமா ஒரு இடம் இருக்கு. அந்த இடத்துல "இந்த இடம் அரசுக்குச் சொந்தமானது"னு ஒரு போர்டு வச்சிருக்காங்க.

இவரு அந்த இடத்தை விக்கணும்னு போகும்போது அந்த போர்டு சிக்கலை உருவாக்குது, விக்க முடியல.

ஓ, புறம்போக்கு நிலம்னா அரசுக்குச் சொந்தமானதுன்னு அர்த்தமா?

ஆமா, விக்க முடியல.

"இது என்னுடைய இடம்" என்பதை நிரூபிப்பதற்கு அவர் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்கிறார்.

இதுவரை விஷயம் முடியவில்லை.

இதுக்கு ஒரு நல்ல இடத்தையே வாங்கிட்டுப் போயிருக்கலாமே?

ஆமா, பெரிய இடமா இருக்கும். 150 கோடி இருக்கும் அந்த வேல்யூ. எப்படி விடுவாங்க?

அதன் பிறகு, கடந்த வாரம் அவர்களாக அழைத்து, காப்பியெல்லாம் வாங்கிக் கொடுத்து, "உங்க வேலை முடிஞ்சிருச்சு"ன்னு சொல்றாங்களாம்.

"என்னால இது நம்ப முடியல"ன்னு அந்த நண்பர் இவரு மோகன்கிட்ட சொல்லியிருக்காரு.

பிறகு சென்னையின் ஒரு பிரபலமான தனியார் பள்ளி, அவர்கள் அந்தப் பள்ளியில்

கேம்பிரிட்ஜ் பிரிவு என்று ஒரு பிரிவைத் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு நடையாக நடந்திருக்கிறார்கள்.

அண்ணன் மகேஷ்தான். ஜட்டி வரைக்கும் உருவிட்டுதான் அனுப்புவாரு ஸ்கூல் நடத்துறவங்கள.

கடந்த வாரம் இவர் முயற்சியே எடுக்கவில்லை, கூப்பிட்டு, "சார், நீங்க பர்மிஷன் கேட்டிருந்தீங்க, கிராண்டட்" என்று கொடுத்திருக்கிறார்கள்.

அவர் சொல்றாரு, 1950-களில்

பர்த் சர்டிபிகேட்டுக்கு ரெண்டு ரூபாய் என்று தொடங்கிய லஞ்சம் இன்று பல கோடிகளாக வளர்ந்திருக்கிறது.

முதன்முறையாக ஊழலை உண்மையாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை குடிமகன்களுக்கு ஏற்படும் வகையில் இந்த ஆட்சியின் தொடக்கம் இருக்கிறது.

என்னங்க சார், முதல்வன் படம் மாதிரி இருக்கு?

ஆமா, நம்ம நிகழ்ச்சியில சொல்லிட்டு இருந்தோம், இன்னைக்கு...

End of transcript · 237 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal