Tamil transcript
பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னாடி ராமருக்கு இங்கு வேலை இல்லை.
ஏன் இதை சொல்றேன்னு சொல்லி சொன்னா, அவர் சொன்னார்ல கம்பராமாயணம்.
கம்பராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டுல எழுதப்பட்டதுதான்.
அதற்குப் பிறகுதான் கம்பராமாயணம் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருக்கு.
அதுக்கு முன்னாடி ஆதியிலிருந்து எடுத்தோம்னா அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம்,
திருமுருகாற்றுப்படை, ஔவையாருடைய நூல்கள் இது எதுலையுமே
ராமாயணம் சொல்லப்படவே இல்லை. ராமரைப் பற்றி எந்த குறிப்புமே இல்லைங்கிறது
இலக்கியங்கள் நமக்கு தெளிவா சொல்லிருக்குல்ல?
அதையெல்லாம் விட்டுக்கொடுக்குறதுக்கு தமிழன் தயாரா இருக்கிறாங்கிறதுக்கு
அவர் துணை போகப் போகிறாரா?
கிருஷ்ணன் வந்து உங்ககிட்ட ஒரு கேள்வி இருக்கிறார்.
கேட்கச் சொல்லுங்க.
சொல்லுங்க திரு கிருஷ்ணன்.
இது வந்து தமிழ் இலக்கியத்தை படிக்காதவர் பேசும் பேச்சு.
சிலப்பதிகாரத்தில் ராமாயணத்தைப் பற்றி மிக மிகத் தெளிவாய் இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் ராமாயணம் பேசப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எங்க இருக்குன்னு?
ராமாயணக் கதை தமிழ்நாட்டில் இலக்கியம்...
இல்ல அண்ணே, எங்க இருக்குன்னு நீங்க படிச்சுக் காட்டணும்.
நீங்க பொதுவுல சொல்லிட்டு நகரக்கூடாது.
நீங்க சொல்லணும்.
அண்ணே அகநானூறுல இருக்கா? புறநானூறுல இருக்கா?
திருமுருகாற்றுப்படையில இருக்கா? நான் கேட்கிறது வேற.
ஏன் இல்ல? இருக்குங்க. படியுங்க. முதல்ல படிச்சிட்டு பேசுங்க.
சார் நான் படிச்சதுனாலதான் பேசுறேன். நீங்க எங்க இருக்குன்னு சொல்லுங்க.
சார் இப்ப அரை மணி நேரம் டைம். நிறைவு பகுதிக்கு முன்னாடி சிலப்பதிகாரத்துல
எந்த இடத்துல ராமாயணம் சொல்லப்பட்டிருக்குன்னு அண்ணன் சொன்னீங்கன்னா சந்தோஷமா நானும் கேட்டு ஏத்துக்குவேன்ல.
சிலப்பதிகாரப் பாட்டு சொல்லவா?
எடுத்துப் படிங்க சார்.
சிலப்பதிகாரப் பாட்டு சொல்லவா?
ஆச்சியர் குரவை படியுங்க.
எடுத்து நீங்க படிங்க சார்.
படிச்சுக் காட்டுங்க சார் நான் தெரிஞ்சுக்கிறேன். எனக்கு தெரியாதுன்னே வச்சுக்கங்க சார்.
தமிழ் இலக்கியத்தைப் படித்துவிட்டுப் பேசுங்கள்.
சார் நீங்க எடுத்துப் படிங்கங்கிறேன்.
நீங்க இதைப் படிச்சுக் காட்டுங்கன்னு உங்களை ரெக்வஸ்ட் பண்றேன்.
திரு கிருஷ்ணன், குறிப்பிட்டு எந்த இடத்துல இருக்குன்னு சொல்லிக் கேட்கிறார்.
கம்பராமாயணம் எந்த நூற்றாண்டுல வந்தது?
சோ... சோரனும்... அந்தப் பாட்டே சொல்றேன் கேட்டுப் பாருங்க.
என் மனசால் நான் கேட்டதைச் சொல்றேன்.
சோரனும் போர்மடியத் தென்னிலங்கை செற்றழித்த சேவகன் சீர் சேராத செவியென்ன செவியே.
திருமால் சீர் சேராத செவியென்ன செவியேன்னு சிலப்பதிகாரம்.
இது சிலப்பதிகாரப் பாடல் வந்து.
இதுல சொல்ல முடியுமா?
தமிழ் இலக்கியத்தில் இல்லைன்னு சொல்ல முடியுமா?
நீங்க முதல்ல தமிழைப் படிச்சுட்டு, பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு அப்புறம்தான் ராமாயணம் வருதுன்னு சொல்லுங்க.
End of transcript · 256 words