Yoga Asanas for Core Strength
அனைவருக்கும் வணக்கம்.
தினம் ஒரு ஆசனாவில் பார்த்தீங்கன்னா இன்னைக்கு நம்ம பண்ணக்கூடிய ஆசனாஸ் வந்து
உத்தித பாத ஆசனா. அதாவது உந்தி உங்களுடைய
கால்களை மேல தூக்கக்கூடிய ஆசனாஸ்தான் இந்த உத்தித பாத ஆசனா.
இதனுடைய பயன்கள் வந்து பார்த்தீங்க அப்படின்னுன்னா வயிற்றில் இருக்கக்கூடிய
தேவையில்லாத ஊளைத் தசைகள் இருக்கு பார்த்தீங்களா அதை வந்து குறைக்கும்.
அதாவது தொப்பை. தொப்பையை வந்து குறைக்கக்கூடிய ஒரு அருமையான
பயிற்சிங்க.
இது வந்து daily பண்ணிட்டே இருந்தா அப்படின்னா ஒரு ஒரு மாசத்துல வந்து அந்த
வயிற்றுடைய வித்தியாசம் வந்து உங்களுக்கு நல்லா தெரியும்.
அது எப்படி பண்ணலாம் அப்படிங்கிறதை வந்து நம்ம பார்க்கலாம்ங்க. இங்க பாருங்க.
First வந்து
காலணிட்டு உட்கார்ந்துடுங்க.
நல்ல நிமிர்ந்து உட்கார்ந்து மெதுவா அப்படியே படுங்க.
படுத்து உங்களுக்கு கால்கள் வந்து சேர்த்து இருக்கணும்.
கைகள் வந்து பக்கபாட்டில் இருக்கோங்க. தலை நேரா இருக்கணும்.
எக்காரணத்தைக் கொண்டு தலையை வந்து அசைச்சிரக் கூடாதுங்க யோகா பண்றப்போ.
தலையை அசைக்கக் கூடாது. இங்க பாருங்க.
இப்போ இந்த ரெண்டு கால்களையும் மேல தூக்கறோம்.
அதாவது இந்த அளவு என்னன்னு பார்த்தீங்கன்னா உங்களுடைய அந்த
பெருவிரல் பார்த்தீங்களா? காலுடைய பெருவிரல்.
அந்த பெருவிரல் வந்து தெரியும்.
தலையை மேல தூக்கக் கூடாதுங்க.
ஆனா அந்தக் கண் பார்த்தீங்க அப்படின்னா அந்தப் பெருவிரல் தெரியும்.
உத்தித பாத ஆசனா. இது வந்து பத்து எண்ணிக்கை வந்து நீங்க
startingல பண்ணலாம்.
மூச்சை வந்து தம்கிட்டக் கூடாதுங்க. மூச்சை விட்டுறணும். Relax.
மெதுவா relax பண்ணிக்கோங்க.
பண்ணிட்டு கால்களையும் கூட அசைச்சுக்கலாம்.
இன்னொரு time பண்றோம் பாருங்க.
One, two, three.
இந்த அளவுதாங்க. மேலயும் போகக் கூடாது. கீழயும் வரக் கூடாது.
உங்களுடைய பார்வை வந்து அந்தப் பெருவிரல் தெரியும்.
Relax.
இது பண்ணிட்டு கொஞ்சம் படுத்துட்டு அப்படியே எழுந்துச்சுக்கோங்க.
இது வந்து பார்த்தீங்கன்னா regular ஆ பண்றப்போ வந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கு
அந்த
வயிறு வந்து இறுக்கமடையும். நீங்க அந்த ஆசனாஸ் பண்றப்போ உங்களுக்குத்
தெரியும்
வயித்து பகுதியில இருக்கக்கூடிய அந்த தசைகள் எல்லாம் இறுக்கமடையும்.
Empty stomachதான் இந்த ஆசனாஸ் பண்ணோங்க.
காலை, மாலை வந்து நீங்க ஒரு பத்து counting. அடுத்தது ஒரு பத்து counting.
இது வந்து பார்த்தீங்க அப்படின்னா இந்த எண்ணிக்கையை நீங்க அதிகம் பண்ணிட்டே
போகலாம்.
ஒரு twenty fiveல இருந்து thirty five வரைக்கும் நீங்க அதிகம் பண்ணிட்டே போகலாம்.
Correct ஆ ஒரு மாசம் பண்ணீங்கன்னாலே இந்த வயிறுடைய தசைகள் வந்து
இறுக்கமடையறது வந்து உங்களுக்குத் தெரியும். மீண்டும் நாளை சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.
End of transcript · 277 words