High Court Criticism of MLA Resignations

MLAக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது கேலிக்

கூத்தான ஒரு விஷயம் என்று

High Court அதிருப்தியை முன் வைத்திருக்கிறது.

கூடுதல் விவரங்களுடன் நமது சிறப்பு செய்தியாளர் ரமேஷ்குமார் நம்மோடு

இருந்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்ன

மாதிரியான அதிருப்தியை முன்

வைத்திருக்கிறார்கள்? ரமேஷ்குமார்.

இந்த வழக்கினுடைய பின்னணி என்று பார்க்கும்போது, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த

தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை,

கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக

MLAக்கள் வந்து தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான கா.

வே. கா.வில் வந்து இணைந்துவிட்டார்கள்.

இதில் வந்து தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர்,

விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்து

உயர்நீதிமன்ற

தலைமை நீதிபதி அமர்வு வந்து ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருக்கிறது.

தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு

தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது.

அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்துல மக்கள் தீர்ப்பை

புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக MLA பதவியை ராஜினாமா

செய்ததால இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் போது

தேர்தல் செலவை deposit செய்யும் வகையில உரிய நடைமுறை

வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிதான் சென்னை சைதாபேட்டையைச்

சேர்ந்த

வழக்கறிஞர் சுதன் என்பவர் வந்து உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு வந்து

தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் வந்து அந்தச் சொந்த அரசியல்

காரணங்களுக்காக

MLAக்கள் வந்து பதவி ராஜினாமா செய்ததால பொதுமக்களுடைய

வரிப்பணத்துல இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளதாகவும், இந்தச் செலவுகளை

அவர்களை பொறுப்பாக்கும் வகையில உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்

கொண்டிருந்தார். அது மட்டுமல்ல, அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை

புறக்கணித்து பதவி விலகும், விலகுபவர்களை வந்து குறிப்பிட்ட காலத்துக்கு

தேர்தலில்

போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

அதுவரை இந்தத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் தடை

விதிக்க

வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதே போல அந்தத் திருச்சி கிழக்கு உள்ளிட்ட அந்தத் தொகுதிகளுக்கும் ஆகும் செலவுகளை

அறிக்கையாகத் தாக்கல் செய்து தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும்

கேட்டுக்

கொண்டிருந்தார். இந்த வழக்குதான் நீதிபதிகள் எஸ். எம்.

சுப்பிரமணியம், கிருஷ்ணன் கோவிந்தராஜன் அமர்வு முன்

விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு விசாரிக்கும் போது நீதிபதிகள் வந்து மக்கள் வந்து ஒரு

நம்பிக்கையை வைத்து அதன் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

என்றும்,

ஆனால் இதுபோல நடவடிக்கைகள் வந்து ஒரு கேலிக் கூத்தாக்குகிறது என்றும், இது

வந்து வாக்காளர்களை ஒரு அவமானப்படுத்தும் செயல் என்றும் ஒரு அதிருப்தியை

வெளிப்படுத்தினார்கள். குறுகிய காலத்துல ராஜினாமா செய்துவிட்டு அதே

தொகுதியில மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

இது குறித்து தேர்தல் ஆணையம் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,

இதைத் தடுக்க இதுவரை

எந்த வழிமுறைகள் இல்லை என்றும், சில அசாதாரண சூழ்நிலைகள்ல தேர்தல் ஆணையம்

முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவித்த நீதிபதிகள் இதுபோல வழக்கு வந்து தலைமை

நீதிபதி அமர்வு முன் நிலுவையில் இருப்பதனால அந்த வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து

விசாரிக்க மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்கள்.

End of transcript · 338 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal