Political Address on Recent Controversies

என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்。

அண்மையில நடந்து முடிந்த சட்டமன்றத்துல

நடந்த சில சர்ச்சைகள்

தமிழ் மக்களுக்கும்,

நம்முடைய உடன்பிறப்புக்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும்

உண்டாக்கியிருக்கிறத நான் உணர்றேன்。

அதுவும்

இந்தச் சர்ச்சையில முக்கியமா

என்னுடைய சிறை வரலாறு இருக்கிறதால நான் அதைப் பத்தி கொஞ்சம்

தெளிவுப்படுத்த விரும்புகிறேன்。 தம்பி விஜய், நீங்கச் சொன்னது

உண்மைதான்,

பொய் எல்லாம் இல்ல。

Emergency காலத்துல

அதை எதிர்த்துத்

தலைவர் கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி

MISA சட்டத்தை கடுமையா விவசித்ததை தொடர்ந்து

அப்ப இருந்த ஒன்றிய அரசாங்கம் முப்பது ഒന്ന്, ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி

ஆறு அன்னைக்கு திமுக ஆட்சியைக் கலைச்சாங்க。

ஆட்சியை கலைச்ச அடுத்த நொடி

MISA சட்டத்துல என்னை arrest பண்றதுக்காகக்

கோபாலபுரம் வீட்டுக்குப் போலீஸ் வந்தாங்க。

அன்னைக்கு நான் வீட்ல இல்ல。

"பையன் பிரச்சாரத்துக்குப் போயிருக்கான்。

நாளைக்கு வந்துடுவான்。 வந்ததும் நானே போன் பண்றேன்。

வந்து arrest பண்ணிக்கோ" ன்னு கலைஞர் சொல்லி அனுப்பிச்சிட்டாரு。

அடுத்த நாள் நான் வந்ததும்

அவரே

போலீஸ வரச் சொல்லி

arrest பண்ண சொல்லிட்டாரு。 சிறையில எனக்குப் பல கொடுமைகள்

நடந்துச்சு。

எங்களைக் கொண்டு போய்

அடைச்சதே தொழுநோயாளிகள் இருக்கிற இடத்துலதான்。

பத்து பேர

ஒரு சின்ன அறைக்குள்ள அடைச்சு வச்சாங்க。

அந்த அறைக்குள்ளேயே

ஒரு பானையிலதான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்கணும்。

அந்த இடமே

ரொம்ப துராசமா இருக்கும்。

அங்கதான் நாங்க தூங்கணும்。

nightல தூங்க விடாம

போலீஸ் லத்தியால அடிப்பாங்க。

boots காலால மிதிப்பாங்க。

இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதிகளை வச்சுவர

எங்களைக் கொடூரமாக அடிப்பாங்க。

அவங்க அடிச்சதுல

என்கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு

jailலயே இறந்து போனார்。

அவங்க அடிச்சதுல

என் தாடை எலும்பெல்லாம் உடைஞ்சு போச்சு。 நீங்கக் கூட

இப்படி கை வச்சு

தாடையை காமிச்சீங்க இல்லையா? அது correctதான்。

இன்னைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள்

எனக்கு இருக்கு。

நான் இல்லைன்னு சொல்லல。

பொதுவாழ்க்கையில் இருக்கிறவங்களுக்கு முக்கியமா

தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும்

போராடுறவங்களுக்கு நிறைய பேருக்கு இந்த மாதிரியான அடக்குமுறைகள்

நடந்திருக்கு。

போராளிகள் எல்லாம் இதைத் தாண்டிதான் வந்திருக்கோம்。

எதிர்த்துப் போராடுறதும்,

அதோட விளைவுகளைச் சந்திக்கிறதும் எங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்ல。

நீங்கக் கொள்கை தலைவரா சொல்ற அர்ரிங்கண்ணா காலத்திலிருந்து

திமுகவுடைய வரலாறே இதுதான்。 அந்த வரலாறில

நானும் இருக்கேங்கிறது எனக்குப் பெருமையான ஒரு விஷயம் தான்。

யார் என்னைக் குச்சியப்படுத்தினாலும் வரலாற மாத்தவே முடியாது。

அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்。

சந்தேகம்னா நீங்கச் சட்டமன்றத்துல ஒரு library இருக்குன்னு சொன்னீங்க இல்லையா?

அங்க எல்லா ஆவணங்களும் இருக்கும்。

அங்கே போய் என்னுடைய போராட்ட வரலாற நீங்கப் படிச்சு பாருங்க。

உண்மை என்னன்னு புரியும்。 இரண்டாவதா,

சர்க்காரியா கமிஷன் பத்தியும், எங்க தலைவர் கலைஞர் பத்தியும்

தவறான தகவலை பேசியிருக்கீங்க。

ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கீங்க。 சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதுக்கு

அப்புறம் ஒன்றியத்துலயும், மாநிலத்துலயும் பல முறை

ஆட்சி மாறிடுச்சு。 இந்த குற்றச்சாட்டுகள்ல ஏதாவது உண்மை இருந்திருந்தா

கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்。

இத்தனை வருஷமா அரசியலுக்காகக் கலைஞர் மேல

காழ்ப்புணர்ச்சி கொண்டவங்க சொன்ன பொய்யான குற்றச்சாட்டா

நீங்களே சொல்லிக்கிட்டு இருக்கீங்க。

அது மட்டுமில்லாம அமலாக்கத்துறை எழுதுன கடிதத்த

எடுத்துக்கிட்டு

அதுல எங்க மேல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறதா சொல்றீங்க。

அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய தொண்ணூத்தி ஐந்து சதவீதம் வழக்குகள்ல

இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாம

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு இருக்காங்க。 பெரும்பாலும்

அரசியல் பழிவாங்குவதற்காகவே

அமலாக்கத்துறை ஏவப்படுறங்கிறது இங்க

இருக்கிற எல்லாருக்குமே நல்லா தெரியும்。 உங்களுக்குத் தெளிவா

சொல்லணும்னா உங்க கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ்

கட்சித் தலைவர் மேல கூட அமலாக்கத்துறை பல வழக்குகளைப் போட்டுருக்கு。

இதெல்லாம் ஒன்றிய அரச

கொள்கை எதிரியா செத்திருக்கிற உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு?

மான்மிமிகு முதலமைச்சர் தம்பி விஜய், நான் உங்ககிட்ட

கேட்கிறது ஒன்னே ஒண்ணுதான்。

தமிழ்நாடு சட்டமன்றத்துக்குன்னு ஒரு மான்மும் மரியாதையும்

இருக்கு。

பல பெருந்தலைவர்கள், மாமனிதர்கள்

தமிழ்நாட்டை செதுக்கி நடுத்தாங்க。

அந்தப் பொறுப்பு

உங்களுக்கு இருக்கு。 சட்டமன்றத்துல சட்டம் ஒழுங்கு

பிரச்சனை, மக்கள் நலத்திட்டங்கள்,

தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்கு கொண்டு போறது,

தமிழ்நாட்டோட உரிமைகளை எப்படி பாதுகாக்கறது இதெல்லாம்

விவாதம் பண்ணுங்க。

அதுதான் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது。 அதை

விட்டுட்டு தேவையில்லாத சர்ச்சைகளைச் சட்டமன்றத்துல பேச

வேணாங்கிறதுதான் என்னுடைய கோரிக்கை。

நீங்க முதலமைச்சரானதும்

என்னைச் சந்திக்க என் வீட்டுக்கு வந்தீங்க。 அப்ப நான்

உங்க கரம் பிடிச்சு வரவேற்றேன்。 அப்போ

நாம பேசும்போது

நீங்க என்கிட்ட

தேர்தல் பிரச்சாரத்துல உங்களை ரொம்ப விமர்சிச்சு பேசிட்டேன்,

"I am sorry sir"ன்னு சொன்னீங்க。 அதுக்கு நான், "பரவாயில்ல

brother, அதையெல்லாம் நான் மனசுல வச்சிக்கல。 நீங்க

இப்போ ஒரு மாநிலத்தோட முதலமைச்சர்.

யாரைப் பத்தி பேசும்போதும்

அந்த கண்ணியத்தோட பேசுங்க"ன்னு சொன்னேன்。 அதையெல்லாம் நீங்க

மறந்துட்டீங்க போல。 திரும்பவும் சொல்றேன்

ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோட உங்களுடைய வார்த்தைகளும்

உடல்மொழியும் இருக்கணும்.

நாமதான் மக்களுக்கு முன்னுதாரணம். அதை மறந்துடாதீங்க.

நீங்க வகிக்கிற பெரிய பொறுப்பை உணர்ந்து நீங்க செயல்படணும்.

சட்டசபையையே Reels எடுக்கும் இடமா மாத்துனது,

நாங்க கட்டுன பாலத்து மேல நின்னு photo shoot பண்றதுன்னு

ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா shooting மாதிரியே

நடத்துறீங்க. உங்களோட திறனற்ற நிர்வாகத்தை மறைக்க

இப்படி விதவிதமா Reels போட்டு

ஒரு தலைமுறையையே ஏமாத்திட்டு இருக்கீங்க.

ஆனா, ரியாலிட்டி என்ன?

உண்மை ஊரைத் தாண்டுறதுக்குள்ள பொய்

உலகத்தையே சுத்தி வந்துடும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல.

அதுதான் நடந்துட்டு இருக்கு. உங்க ஆட்சியில தினம்

தினம் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான

பாலியல் குற்றங்கள்னு சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கு.

பரந்தூர் airport திட்டத்தை ரத்து பண்ணி

தமிழ்நாட்டோட வளர்ச்சிய பதினைந்து வருஷம்

பின்னாடி கொண்டு போயிருக்கீங்க.

விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி ன்னு வாக்குறுதி

கொடுத்தீங்க. ஆனா அதையும் ஒழுங்கா பண்ணல.

அனைத்து குடும்பங்களுக்கும் வருஷத்துக்கு ஆறு cylinder

ன்னு சொன்னீங்க. இப்போ தகுதி உள்ளவங்களுக்கு

மூணு cylinder மட்டும்னு underbelly அடிச்சிருக்கீங்க.

மகளிர் உரிமை தொகை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்ன்னு சொன்னீங்க.

இன்னும் நாங்க கொடுத்த அதே ஆயிரம் ரூபாயை தான்

கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. இன்னும் பல வாக்குறுதிகள் பத்தி

வாயைத் திறக்காம இருக்கீங்க. அப்பச் சொன்னதெல்லாம் ஒன்னு.

இப்ப செய்றதெல்லாம் ஒன்னு. மாற்றம் வேணும்னு நினைச்சு

வாக்களிச்ச மக்கள், குறிப்பா நமது இளைஞர்கள்.

உண்மையாவே இப்ப என்ன மாற்றம் வந்திருக்கு?

இது சரியான மாற்றமா? அப்படிங்கறத கவனிங்க.

எது நிர்வாகத்திறன் வாய்ந்த அரசு,

எது திறமை இல்லாத அரசுங்கறத நீங்கப் புரிஞ்சுக்கோங்க.

குறிப்பா, கழக உடன்பிறப்புகளுக்கு நான் வலியுறுத்த

விரும்புவது என்னன்னா,

மக்கள் நமக்கு முழுமையா ஓட்டு போடல.

நம்ம ஆட்சிக்கு வர முடியல. அதனால இந்த ஆட்சியில

நடக்குற தவறுகளால மக்கள் பாதிக்கப்படும்போது

நமக்கென்னன்னு இருக்கக் கூடாது. அப்படி ஒரு எண்ணம்

நம்ம சித்தாந்தத்திலேயே கிடையாது.

ஆட்சி எடுக்கறத திமுக என்னைக்குமே தோல்வியா

நினைச்சது இல்ல.

ஒரு நாணயத்துக்கு

ரெண்டு பக்கம் இருக்கிற மாதிரி

இத மக்கள் பணியோட இன்னொரு முகமாத்தான் நான்

பார்க்குறேன்.

ஆட்சியில் இருக்கமோ இல்லையோ என்னிக்கும் தமிழ்நாட்டோட

உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும்,

மக்களுக்காகவும் நாம சண்டை செஞ்சுகிட்டே இருக்கணும்.

அவங்க தாத்தாவுக்காகச் சண்டை செஞ்சோம்.

அவங்க அப்பாவுக்காகச் சண்டை செஞ்சோம்.

இப்போ அவங்களுக்காகவே சண்டை செய்வோம்.

இது தான் நம்ம திமுகவோட வரலாறு. அந்த

வரலாறு எப்பவும் மாறாது. மாறவும் கூடாது.

நன்றி வணக்கம்.

End of transcript · 773 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal