முருகன் வடக்கில் பிறந்தவரா? ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எதிர்ப்பு

அண்மைச் செய்தியைப் பார்த்து வருகிறோம்.

முருகன் வடபுலத்தில் பிறந்தவர் எனக் கூறி உருவாகும் ஜூனியர் என்.டி.ஆர். திரைப்படத்திற்கு சீமான் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்த விவரங்களுடன் செய்தியாளர் வெங்கட் இணைந்திருக்கிறார்.

வெங்கட், விவரங்கள்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டரில்

'Born in the North' வடக்கில் பிறந்தவர் என்ற வாசகம் முருகப்பெருமானை வடநாட்டு கடவுளாகச் சித்தரிப்பதாகக் கூறி

அந்த வெளியான அந்த போஸ்டர் என்பது வெளியான நிலையில,

பல்வேறு தரப்புல கண்டனம் தெரிவித்து வரக்கூடிய நிலையில்,

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்த அறிக்கையில், தமிழர்களின் இறையோர் முருகப்பெருமானை மையப்படுத்தி

என்.டி.ஆர். திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில்,

தமிழர் இறையோர் முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்கின்ற கருத்துருவாக்கத்துடன்

உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படைப் புரிதலற்று இது போன்ற வரலாற்றுத் திரிபுகளை

உண்மையெனக் கட்டமைக்க முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்தான் முருகன், முருகன்தான் தமிழ், இரண்டும் பிரிக்க முடியாதது.

முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல,

அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்.

முருகன் தமிழர்களுக்கே உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும் தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு.

முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்னும் கட்டுக்கதைகளை கலை என்னும் பெயரில் திணிக்க முயல்வதை படக்குழு...

மிகக் கடுமையான... ஒருவேளை கைவிடக்கூடிய பட்சத்தில், கைவிடவில்லை என்றால்,

மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சீமான் எச்சரித்திருக்கிறார்.

முருகன் வடநாட்டில் பிறந்தவர் என்று ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் திரிவிக்ரம் பட அறிவிப்பில் குறிப்பிட்டதற்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று தமிழ் கூறும் மொழிமொழியை மெய்ப்பிக்கும் விதமாக

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்திருக்கிறது.

எனவே, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எப்போதும் அதுக்கான மரியாதை இருக்கிறது.

இது மிகக் கடுமையான எதிர்விளைவுகளை, இதை கைவிடாவிட்டால் கடுமையான எதிர்விளைவுகளை நேரிடும் என

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார் லாவண்யா.

விவரங்களுக்கு நன்றி வெங்கட்.

End of transcript · 244 words

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal