Ravana's Perspective on His Legacy
பத்து தலை கொண்டவன். சீதையை தூக்கிச் சென்றவன்.
ஸ்ரீராமனால் கொல்லப்பட்டவன். மூன்று வரிகளுக்கு என் வரலாற்றை முடித்துக்
காட்டுபவர்களே! ராவணன் ராவணேஸ்வரன் பேசுகிறேன்.
என் உயரத்தை சொல்வதற்கு ராவண காவியம் எதற்கு?
கம்பனிலிருந்து பேசிக் காட்டுகிறேன். ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்னவா? ராவண ராஜ்யம் தெரியுமா?
என் கோட்டை சுவரை தாண்டுவதற்கு வெளிச்சம், காற்று, என் காலன் கூட
நடுங்குவான். சொன்னது நான் கிடையாது. எதிராளி அனுமன்.
என்னுடைய நகரத்தை சுத்தம் செய்வது நான் வென்றெடுத்த தேவாதி தேவர்கள்.
ஆனால் பாவம் என்னுடைய மக்கள். அவர்களுக்கு கொண்டாட்டம் என்றால் தெரியாது.
காரணம் உலகத்தில் கவலை என்று ஒன்று இருப்பது தெரிந்தால் தானே
கொண்டாட்டத்தை உணர முடியும். இசையையும் பாடலையும் மட்டுமே
கேட்டு கேட்டுப் பழகிய காது என் மக்களுடைய காது.
ஒரு நாளும் அழுகையும் புலம்பலும் அவர்களுக்கு என்னவென்றே தெரியாது.
ஒரு நாள் தெரிய வந்தது. அண்ணா என்று ரத்தம் சொட்ட சொட்ட சூர்ப்பனகை
ஓடி வந்து என் காலில் கிடந்த அந்த நாள் அவர்களுக்கு அழுகை
தெரிந்தது. யார் என்ன சொல்வது? எனக்கே தெரியும்.
என்னுடைய சாவுக்கு காரணம் நான் செய்த தவறு.
யாராவது சொல்ல முடியுமா என்னுடைய கோபமும் தவறு.
வரலாறு முழுக்க வீழ்த்தப்பட்டால் அவன் வீரன் கிடையாது.
அப்படிதானே. இனி மூன்று உலகத்திலும் என்னால்
வெல்லப்படுவதற்கு
எவனுமே கிடையாது என்று இருபது கைகளையும் சும்மா வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட
கொடுமை. பாவம் யானைகளோடு சண்டை போட்டுக்
கொண்டிருந்தேன்.
சிவபக்தன் நான். கைலாயத்தை தூக்கி பார்த்தால் என்ன என்று
தூக்கி பார்த்துத்
தோல்வியடைந்தேன். ஆம் தோற்றுப்போனேன்.
ஆனால் ஒருபோதும் அது என்னுடைய சிறுமையில் சேர்க்கச் சொன்னது கிடையாது.
கைலாயத்தையே நகர்த்தி பார்த்தவன் என்று பெருமையில் தான் சேர்த்தேன்.
காரணம் காண முயலந்த அம்பு என்னுடையது கிடையாது.
யானை பிழைத்த வேலை ஆண்டியவன் இந்த ராவணன்.
நண்பர்களே! ஒட்டுமொத்த காப்பியமும் ராவணனை
அரக்கனாகப் பார்த்தது. ஆனால் ராமனை நாயகனாகப் பார்த்தது.
கடவுளாகப் பார்த்தது. ஆனால் இந்த அரக்கன் மட்டும்தான்.
அவன் கடவுள் மட்டும் கிடையாது. அதைவிட பலபடி மேலானவன் என்று
வேத முதற்காரணன் என்று பரமுரலாகப் பார்த்தேன்.
அப்படிப்பட்ட ராமன் வேதம் உள்ளவரைக்கும் இந்த உலகத்தில் பேசப்படுவான் என்றால்
எதிர்த்து நின்று செத்துப்போன இந்த ராவணனும் உள்ளவரைக்கும் பேசப்பட்டுதான்
கொண்டிருப்பான். ஒருமுறை சுற்றி பாருங்கள்.
பத்து தலை சரிவதற்கு முன்னால் இறுதிப் போருக்குச் சென்று கொண்டிருந்த அந்தத்
தருணத்தில் சொல்லிவிட்டுதான் சென்றேன்.
ஒன்று இந்த நாளில் சீதை தன்னுடைய வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவாள்
அல்லது என்னுடைய மனைவி மண்டோதரி அதையே செய்வாள் என்று என்னுடைய தலைகள்
சரிவதற்கு முன்பு நான் யார் என்று காட்டிவிட்டுத் தான் செத்துப்போனேன்.
நான் வாழ்ந்தபொழுது என்னுடைய முகம் எத்தனை மடங்கு பிரகாசமாக இருந்ததோ, செத்து
தரையில் கிடந்தபோது அதைவிட மூன்று மடங்கு பிரகாசமாக இருந்தது.
நம்பவில்லை என்றால் கேட்டுப் பாருங்கள். நேரில் பார்த்த ராமனே சாட்சி.
யாராவது சொன்னால் ராவணன் சொன்னான் என்று திரும்பிச் சொல்லுங்கள்.
ஒருபோதும் இந்தியாவினுடைய இதிகாசங்களில் ராவணன் என்னைப் போன்ற ஒரு
எதிர்நிலை பாத்திரம் இன்றை வரைக்கும் எழுந்தேறியது கிடையாது.
ஒருநாளும் ராவணன் இரங்கத்தக்கவன் அல்ல.
இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி. அவன் கோயில் கட்டி வணங்கத்தக்கவன் தான்.
வணக்கம்.
End of transcript · 340 words