கமல், ரஜினி, அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தது ஏன்
2 min About India Film & TV
2 min About India Film & TV
இன்னைக்கு இருக்கிற கமல், ரஜினி, அஜித் இவங்க எல்லாம் வந்து அவங்களுடைய மன்றங்களை கலைச்சிட்டாங்க.
கலைச்சிட்டு என்ன சொல்றாங்கன்னா, நீங்க எல்லாம் வந்து உங்க புள்ள குட்டிய படிக்க வைங்க.
குடும்பத்தை நல்லா பாத்துக்கங்க. நாங்க எல்லாம் பூத்தாடிங்க.
எங்க பின்னால எல்லாம் சுத்தாதீங்க அப்படின்னு சொல்லிட்டு advice எல்லாம் பண்ணாங்க.
அடங்கொய்யால நீங்க எல்லாம் அவ்வளவு நல்லவங்க இல்லடா.
அவ்வளவு அக்கறை உங்க ரசிகர்கள் மேல. அதெல்லாம் கிடையாது.
அன்னைக்கு ஆரம்ப காலத்துல இவங்க எல்லாம் வளரலை.
அன்னைக்கு இவங்களுக்கு poster ஓட்டுறதுக்கு ஒரு ஆள் வேணும்.
தோரணம் கட்டுறதுக்கு ஒரு ஆள் வேணும். பாலாபிஷேகம் பண்ண ஆள் வேணும்.
இவங்களுக்கு போட்டியா இருக்கக்கூடிய நடிகர்களுடைய ரசிகர்களோட சண்டை போடுறதுக்கு ஒரு ஆள் வேணும். இப்படி தான் எல்லா ரசிகர் மன்றத்தையும் வளர்த்து வச்சிருக்காங்க.
இன்னைக்கு நல்லா வளர்ந்துட்டாங்க. இனிமே அவங்க இவங்களுக்கு தேவை கிடையாது.
இனிமே அவங்களை வச்சிருந்தா என்ன பிரச்சனை வரும்?
ஒவ்வொரு மன்றத்திலும் பிரச்சனை வரும். அந்தப் பிரச்சனை தீர்த்து வைக்கணும். ஒவ்வொரு ஊர்லயும் எங்கயோ போய் வம்புiluப்பான்.
அத போயி தீர்த்து வைக்கணும். அப்புறம் மன்றத்துக்கு எவ்வளவு செலவாச்சு, அவ்வளவு செலவாச்சு, கொடுன்னு கேப்பாங்க. செலவு item.
அது இவங்களுக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது. அதனால அதையும் cut பண்ணனும்.
ஒரேடியா மன்றங்களை கலைச்சிடறோம். எங்களுக்கு வந்து புகழ் இல்ல, நாட்டம் இல்ல.
எங்களுக்கு வந்து இந்த மாதிரி கூட்டத்துல நாட்டம் இல்ல.
நாங்க விலகி நிற்க விரும்பறோம் அப்படின்னு சொல்லிட்டு தப்பாஞ்சி வந்திடுறது. இது தான் இப்ப இருக்கிற நடிகர்களுடைய ரசிகர்களுக்கும் நடக்கப்போகுது.
இவங்களும் வளர்ந்த பிறகு நமக்கு எதுக்குப்பா சங்கம் எல்லாம், கலைச்சிடலாம் அப்படின்னு தான் சொல்லப்போறாங்க. இப்படி எல்லாம் வளர்ந்ததுக்கு அப்புறமும் சங்கங்களை வச்சு நடத்திட்டு இருக்காங்க அப்படின்னு சொன்னா, அவங்க matter-யே வேற.
அவங்களுக்கு PM ஆகணும்னு, CM ஆகணும்னு எண்ணம் மனசுக்குள்ள இருக்கும்.
அதுவரைக்கும் உங்கள கொம்பு சீவி விட்டு வளர்த்துக்கிட்டு தான் இருப்பாங்க.
ஆனா கடைசியில பலியாகப்போறது நீங்க தான்.
End of transcript · 215 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.