0:00

உதாரணத்துக்கு இன்னொரு மறுப்பு கூடத் தெரியுங்க.

0:01

நீங்கத் தமிழர் அப்படின்னு சொல்லிட்டீங்கன்னா அடுத்த கட்டத்தை நோக்கி நகருவீங்க.

0:05

சாதியை நோக்கி நகருவீங்க. நீங்க என்ன சாதி?

0:08

அப்ப இந்தச் சாதி தான் நீங்கத் தான் தமிழர் அப்படின்னு சொல்லுவீங்க.

0:09

அப்பத் திராவிடர் ன்னு சொல்லிட்டீங்கன்னா பார்ப்பனர் அல்லாதவர் அனைவருமே திராவிடர் ஆ மாறிடுறாங்க. இப்ப வந்து பொதுவா வந்து திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும் சரி, மத்தவங்களும் என்ன உருட்டிக் கிட்டு இருக்காங்க அப்படின்னா, திராவிடன் சொன்னா பிராமணர்களைக் குறிக்காதுன்றாங்க.

0:22

Encyclopedia Britannica, ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஏழாவது ஆண்டு edition தொகுதி ஏழு. அதுல வந்து திராவிடன் அப்படின்னா என்ன அர்த்தம்னு பார்க்கப் போனா, பார்ப்பனர்களில் ஒரு பகுதிக்குத் திராவிடன்னு பேரு அப்படின்னு Encyclopedia Britannica குறிப்பிட்டு இருக்காங்க.

0:37

அவங்க அதுக்கு எத foot note ஆ போட்டு இருக்காங்க அப்படின்னா, Edgar Thurston ன்னு சொல்லிட்டு ஒரு ஆங்கிலேயர் அவர் வந்து தென்னிந்திய குலங்களும் குடிகளும் ஒரு புத்தகம் எழுதினாரு. அதுல Edgar Thurston என்ன சொல்றாரு அப்படின்னா, திராவிடங்கற சொல்லப் பாத்தோம்னா தென்னிந்தியாவில் வாழக்கூடிய பிராமணர்கள்

0:51

தங்களை குறிப்பிடப் பயன்படுத்திய சொல் திராவிடங்கற சொல் அப்படின்னு சொல்லிட்டு Edgar Thurston வந்து எழுதியிருக்கிறார்.

0:56

சரி அவர் சொல்றது பொய்யா இருக்கும் போல இருக்கு அப்படின்னு நம்ம gazette எடுத்துப் பாத்தோம்னா, தமிழ்நாட்டுல வந்து இந்தத் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இதெல்லாம் இருக்கு இல்லீங்களா, இது இல்லாம திராவிட ங்கிற பெயரை வேற யாராவது பயன்படுத்துறாங்களா?

1:09

ரொம்ப எளிமையா பார்க்கப் போனா திராவிட ங்கற சொல்லை யார் பயன்படுத்துறாங்கன்னா பிராமணர்கள் பயன்படுத்துறாங்க. நான் ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்க.

1:15

என்னால ஒரு சின்ன பட்டியல் நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

1:17

தென் கனரா திராவிட பிராமணர் சங்கம், புத்துரு திராவிட பிராமணர் சங்கம், ஸ்ரீகோணசீமா திராவிட சங்கம், தும்மகட்டா திராவிட பிராமணர் சங்கம், உடுப்பி ஸ்தானிகா திராவிட பிராமணர் சங்கம், உடுப்பி தென் கனரா திராவிட பிராமணர் சங்கம். இதெல்லாம் வந்து பிராமண அமைப்புகளோட பெயர்.

1:34

அப்போ இந்தத் திராவிட ங்கற சொல்ல அவங்க எதுக்கு பயன்படுத்துனாங்க அப்படின்னா, தென்னிந்தியாவில் வாழக்கூடிய பிராமணர்களைக் குறிப்பிடுறதுக்கு அவங்க பயன்படுத்தின சொல் தான் திராவிடங்கற சொல்.

1:45

அப்போ திராவிடங்கற சொல் ஆரிய என்கிற சொல்லினுடைய பிரிவுகள்ல ஒண்ணு. ரொம்ப எளிமையா நான் கேக்குறேன்.

1:52

இப்போ வந்து ராகுல் திராவிட் னு ஒரு cricket player இருக்காரு.

1:55

எல்லாருக்குமே தெரியும். அவர் வந்து பிராமணர்.

1:57

அவர் பெயருக்கு பின்னாடி திராவிட் ன்னு ஏன் வருதுன்னா, அவர் திராவிட பிராமணர்ங்கிறதுனாலதான். Matrimony site ல போய்ப் பார்த்தீங்கன்னா, ரொம்ப குறைஞ்சது ஒரு பத்தாயிரம், பதினைந்தாயிரம் பேர் திராவிட அப்படிங்கற பெயரோட இருக்காங்க.

2:06

அத்தனை பேருமே பிராமணர். அப்போ அவங்க கிட்ட இருந்து ஒரு வார்த்தையை எடுத்து பிராமணர்களை மட்டுமே குறிக்கக்கூடிய ஒரு சொல்ல எடுத்துக் காமிச்சு, இது பிராமணர் அல்லாதவர்களைக் குறிக்கக்கூடிய சொல்லு அப்படின்றாங்க. நான் sample காமிக்கிறேன்.

2:17

திராவிட ங்கற சொல்லு இந்தக் காரணத்தால ஆரியன்ற சொல்லுக்கு எதிரானது அப்படின்னு நீங்கக் காட்ட சொல்லுங்க. இல்ல. வரலாற்றுப் படி இல்ல.

2:24

இவங்க சொல்றது ஒரு பேய்க்கதை. எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லாத ஒரு கதைய இவங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க. இவங்களுக்கும் தமிழ் ன்னு சொல்லக் கூடாது.

2:31

ஒரு விஷயத்தை யாரு பண்ணாங்கன்னு கேட்டா, தமிழ் ன்னு சொன்னா அது வந்து நேரடியா தமிழருக்கு வந்துரும். சொல்லாம திராவிட ன்னு சொன்னா அதுல வந்து ஒரு பகுதி வந்து தெலுங்கர்களுக்கும், ஒரு பகுதி வந்து கன்னடர்களுக்கும், ஒரு பகுதி மலையாளிகளுக்கும் பிரிச்சு கொடுக்கலாம்.

End of transcript · 380 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal