நேர்மையா, தமிழ் அடையாளமா? முன்னாள் முதல்வர்கள் பற்றிய அரசியல் பேச்சு
2 min About India Politics
2 min About India Politics
இன்றைக்கு ஐம்பதாண்டு காலம் இரண்டு திராவிடக் கட்சிகளும் ஆண்டு கொண்டிருக்கும்போது தொண்ணூறு விழுக்காடுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் தானே?
பச்சை தமிழர்கள் தானே? இந்தப் பச்சை தமிழர்கள் தானே கொள்ளையடித்திருக்கிறார்கள்?
இவர்கள் அத்தனை பேரும் கொள்ளையடித்திருக்கிறார்களா இல்லையா?
ஆனால் 1946இல் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு இந்த இடத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் பிரகாசம்.
அவர் தெலுங்கர். அவர் பத்து பைசா அரசியலை வைத்து சம்பாதித்தார் என்று யாராவது சொல்ல முடியுமா?
இவர்களுக்கு அவருடைய வரலாறாவது தெரியுமா? 47இல் நாடு விடுதலை பெற்றபொழுது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
அவர் தெலுங்கர். ஓமந்தூராரைப் போல அரசியலை நடத்தக்கூடிய மனிதர்கள் யாராவது ஒருவர் இருப்பதாக இன்றைக்கு இந்தத் தமிழ் இனம் சார்ந்து கொடி தூக்கக்கூடியவர்களால் சொல்ல முடியுமா?
நான் இருக்கிறேன் ஓமந்தூரார் மாதிரி என்று அவர்களே அவர்களைச் சார்ந்தவர்கள் ஒருவராவது சொல்ல முடியுமா?
புரவியைப் போன்று இந்த முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து வாழ்ந்த மனிதன் ஓமந்தூரார்.
அவருக்குப் பிறகு குமாரசாமி ராஜா தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தார்.
1949லிருந்து 1952வரையில். அதுமாதிரி மனிதனைப் பார்க்க முடியுமா நீங்கள்?
பழுத்த காந்தியவாதி. தன் சொத்து முழுவதையும் ராஜபாளையத்தில் இருக்கிற மக்களுக்குக் கோடி கோடியாகப் பெரும் இன்றைக்கும் அவ்வளவையும் மக்களுக்கு எழுதி வைத்துவிட்டு ஐம்பது ரூபாய் வங்கிக் கணக்குடன் செத்துப்போன மனிதன்.
அவர் தமிழர் இல்லை. ஆனால் இந்த ஐம்பதாண்டு காலம் தமிழர்களாக இருந்த ஆண்டவர்கள் அத்தனை பேரும் கொள்ளையடித்திருக்கிறார்கள்.
எனக்குத் தேவை நேர்மை சார்ந்த ஒருவன் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே தவிர ஒரு தமிழச்சிக்கும் ஒரு தமிழனுக்கும் பிறந்துவிட்டதனாலேயே ஒருவன் அதற்கான தகுதிகளைப் பெற்றுவிட்டதாக நான் நினைக்கவில்லை.
என்னுடைய வீட்டில் திருடுவதற்கு வருகிறான்.
நான் உடனே என் வீட்டின் கதவில் வெளியே ஒரு board மாட்டி வைக்கவா?
திருட தாராளமாக வரலாம் தமிழராக இருந்தால்.
தமிழராக இருந்தால் திருடத் தடை இல்லை. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்வது எவ்வளவு பேதமையோ அப்படித்தானே இது?
End of transcript · 209 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.