ஊழல், மக்கள் பணம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி ஆதரவு
2 min Filmed in India
2 min Filmed in India
பல டிபார்ட்மென்ட்லயும் மறுபடியும் சொல்றேன், கட்சி நிதின்ற பேர்ல அடிச்ச கொள்ளைய ஒன்னு ஒன்னா கவர்மெண்ட்டோட கஜானாக்குள்ளேயே கொண்டு சேர்த்துக்கிட்டே இருக்காங்க.
இப்பவும் சொல்றேன், மக்கள் பணத்துல இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம், தொடவும் விட மாட்டோம், தொட்டா விட மாட்டோம், இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டோம்.
ஒவ்வொரு ஊழலா வெளிய வரும்போதே, ஒவ்வொரு வேஷமா கலைஞ்சிரும் போலயே, இங்க இருக்கிற நிறைய பேரு நடுங்கிப்போயி, இதுல நம்ம மேல அவதூறு வேற.
இப்ப புதுசா ஒரு வெப்பன் ஒன்னு கொண்டு வந்திருக்காங்க. அது என்ன தெரியுமா?
அவங்க தயவால தான் நம்ம ஆட்சி நடக்குதாம். மக்கள் தயவால இந்த ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு!
மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால இந்த ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு!
நாங்க தான் அனுப்பி வச்சோம், நாங்க தான் அனுப்பி வச்சோம் அப்படின்றாங்களே, அனுப்பி வச்சவங்களுக்கு மினிஸ்ட்ரில இடம் கொடுத்தா ஏன் கதறுறீங்க?
ஏன் இவ்வளவு கோவம்? ஏன் இவ்வளவு கதறல்? இதுல இன்னொரு முக்கியமான விஷயம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க.
அதே மாதிரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையா எடுத்த முடிவுன்னு சொல்றாங்க.
இதுல எங்கிருந்து நாங்க தான் அனுப்பி வச்சோம், நாங்க தான் அனுப்பி வச்சோம்னா புரியலையே.
மக்களுக்கு நல்லா புரியும். எல்லாத்தையும் தெளிவா பார்த்துக்கிட்டு இருக்காங்க.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கண்டினியூ பண்ணலாம். மாண்புமிகு முதலமைச்சர்...
End of transcript · 158 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.