தவெக வாக்குகள், கரூர் சம்பவம்: அதிமுக தரப்பு பதில்
உங்களுக்கு தவெக எந்த வகையிலாவது திரட்டா இருக்காங்களா?
அண்மைக்கால கருத்துக்கணிப்புகள் எல்லாத்துலயுமே தவெகவுக்கு குறிப்பிடப்படுகிற அந்த 15 பர்சன்டேஜ்ங்கிறது
ஆதிமுகவிலிருந்துதான் குறைச்சிருக்காங்க.
அது உங்களுடைய வாக்குகளிலிருந்துதான் தவெகவுக்கு டிரான்ஸ்பர் ஆகுதுங்கிறத பொருள் எடுத்துக்கலாமா?
அதனாலதான் இந்த பாய்ச்சலா?
அது எப்படி சார் சொல்ல முடியும்? கருத்துக்கணிப்புகளே வந்து முழுசா நம்ப முடியாது.
அப்புறம் அது ஆதிமுகல இருந்துதான் எடுக்கப்பட்டதுன்றது திமுக செட் பண்ற நரேட்டிவ்வாதான் அத நாம பார்க்க முடியும்.
அத நாம புறந்தள்ளிடுவோம். அது ஒரு விஷயமே... இட் டசன்ட் மேட்டர். அப்படி கிடையாது.
அப்படி இல்ல. அன்னைக்கு வந்து பார்த்தீங்கன்னா ஒரு... ஒரு மெச்சூர்ட்...
இப்ப நான் சொன்ன மாதிரி அதன் அடிப்படையிலதான் அவருடைய மனநிலை என்னவா இருக்குமோ... அவர் தவறே பண்ணல.
இதுல தவெகவோட பங்களிப்பு ஒன்னும் இல்லன்னு சொல்லலாம் அங்க.
மனநிலை என்னவா இருக்குமோ அதனால அவர வந்து நாம இது பண்ண வேண்டாம் இப்போ அப்படின்ற அடிப்படையில
அவர் ஒரு வார்த்தை சொன்னாரு.
நான் என்ன கேக்குறேன்? அது வந்து மறுநாள் காலையில ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அங்க போறாரு.
எல்லாரும் சொன்ன மாதிரி எங்களுடைய மாவட்ட செயலாளர் போறாரு. நாள் பூரா அங்கேயே இருக்காரு அவரு.
அண்ணன் முன்னாள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அண்ணன் அவங்க எல்லாமே இருக்காங்க எங்க கட்சிக்காரங்க. உங்க ஆளுங்க எங்க?
சரி உங்க தலைவர்தான் ஓடி போயிட்டாரு. உங்க மாவட்ட செயலாளர் மறைஞ்சிட்டாரு.
மத்த எல்லாரும் எங்க?
அதுக்கு முன்னாடி உங்க தலைவர் வராருன்னு வண்டில எல்லா மாவட்டத்துக்கும் நீங்க போறீங்கள்ல?
உங்க மாவட்ட செயலாளர்கள் எல்லாரும் வராங்க. புஸ்ஸி இருக்காரு, ஆதவ் அர்ஜுனா இருக்காரு,
இன்னும் எல்லாரும் இருக்காங்க.
போயிருக்கலாம்ல ஒருத்தராவது? சும்மா இது என்ன சால்ஜாப்பு கதை இது?
அவங்க அனுப்பல... அவங்க அனுப்பல... எப்படி போலீஸ்...
அத நீங்க அப்ப அங்கேயே பிரஸ்ல ரிவீல் பண்ணிருக்கலாம்ல? பாருங்க நாங்க போறோம்ன்றோம் அனுப்ப மாட்டறோம் அப்படின்னு.
இத இன்னைக்குதான சொல்றீங்க நீங்க? எங்கள அனுப்பல அனுப்பல அப்படின்னு.
அப்படித்தான் சொன்னாரு. இன்னொன்னு எங்க கட்சிக்கு... இந்த தமிழ்நாட்டு அரசியல் கட்சி வரலாற்றுல...
எந்த தலைவருக்கு மாற்றுக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் கொடி பிடிச்சுட்டு வந்து நிக்கிறாங்க?
ஒரு இடம்னா நாங்க நின்னோம் அப்படின்னு.
அது அந்த குற்றச்சாட்டு ரெண்டு நாள்ல மறைஞ்சிடுச்சுல்ல? அவங்கதான் வந்தாங்க அப்படின்னு
அவங்களே பேட்டியும் கொடுத்தாங்க.
எங்களுக்கு கரூர்ல அவர் வந்து எங்கள சப்போர்ட் பண்ண விதம் எங்களுக்கு ஆறுதலா இருந்தது
அவ்வளவு பெரிய நிகழ்வு நடக்கும்போது.
அதனால நாங்க வந்தோம்னு சொன்னாங்க. அவங்கள பார்த்து வாங்கன்னு சொல்றதுல வேற எப்படி சொல்ல முடியும்?
அவர் எப்பவுமே எடப்பாடியார் வந்து எதையும் ரொம்ப மெச்சூர்டாக அணுகக்கூடியவர்.
50 ஆண்டுகால அரசியல். இன்னைக்கு என்டிடிவி பேட்டியில கூட அவர்...
அவர் திட்டல அவர.
நான் அன்னைக்கு சொன்னதுக்கான காரணம் வந்து ஒரு மெச்சூரிட்டிதான் அது அப்படின்றதுதான் அவர் சொல்றாரு அவரு.
அவர எதிரியாகவும் பார்க்கல. இல்ல எங்ககிட்ட வரணும்னு... அந்த நிலைப்பாட்டுல ஆதிமுக என்னைக்குமே கிடையாது.
நாங்க தனிச்சு கூட நின்னிருக்கோங்க. நாங்க... என் பிரதான எதிர்க்கட்சிங்க.
செங்கோட்டையன் அவர்கள் சொல்ற மாதிரி அந்த எதிர்க்கட்சியிலதான் 75 பேர் ஜெயிச்சிருக்காங்க.
இன்னைக்கு எடப்பாடியார் அவர்கள் அவர் எந்த தேர்தலிலும் ஜெயிக்கவில்லைன்னு வெட்கமில்லாமல் பேசுறாரு
செங்கோட்டையன் போன்றவர்கள்.
அவர் கொடுத்த மாவட்ட செயலாளர், அவர் கொடுத்த கல்வி அமைச்சர் பதவி.
அன்னைக்கு அம்மா இருக்கும்போது இதே செங்கோட்டையன் அவர்கள் என் நெஞ்சை திறந்து பார்த்தால்
ஹனுமனின் நெஞ்சை பிளந்தால் ராமன் இருப்பது போல...
என் நெஞ்சில் அம்மாதான் இருக்கிறீர்கள். இந்த சசிகலா குடும்பத்தார் போன்றவர்கள் இல்லைன்னு
பொதுக்குழுல பேசினாரு.
இன்னைக்கு இவரு என்ன பேசுறாரு வந்து? நீங்க எல்லாம் ஒன்னா இணைக்கணும்னு சொன்னாரு.
ஒன்னா இணைக்கணும்னு சொல்லிட்டு இதே அன்னைக்கு அடிமையாக நீங்கள் மத்திய அரசில் இருக்கிறீர்கள்னு
இன்னைக்கு சொல்லக்கூடிய ஒரு பாஜகவோட...
அமித்ஷாவை ஏன் போய் பார்த்தீங்க நீங்க?
இதெல்லாம் பார்த்துட்டு... ஒன்னு... அம்மா இருக்கும்போது ஒரு பேச்சு பேசினீங்க.
அமித்ஷாவை போய் பார்த்தீங்க. இன்னைக்கு போய் தவெகால உட்கார்ந்துட்டு இவரால முடியவில்லைன்றீங்க.
இவரால முடிஞ்சு... இந்த எடப்பாடியாருக்கு ஓட்டு போடுங்கள் அண்ணா திமுக பொதுச்செயலாளர் வருகிறார்னு
பிரச்சாரம் பண்ணிதான 75ல ஒரு சீட் நீங்க ஜெயிச்சீங்க?
அப்பல்லாம் உங்களுக்கு தெரியல.
இதே ஸ்டெர்லைட் விவகாரம் இருக்கும்போது எடப்பாடியார் அவர்கள் அந்த சூழ்நிலை அன்னைக்கு அப்படி இருந்தது...
நான் என்கொயரி எல்லாம் கொடுத்திருக்கேன். ப்ராப்பரா போயிட்டு இருக்குன்னு சொல்லும்போது
பக்கத்துல நின்னுட்டு இருந்தீங்களே?
அப்பயே போர்க்கொடி உயர்த்திருக்கலாம்ல? இல்ல இல்ல அப்படிலாம் இல்ல நீங்க போலன்னு சொல்லிருக்கலாம்ல?
அதனால இதெல்லாம் வந்து ஒரு புறம் தள்ளப்பட வேண்டிய மூன்றாம் தர அரசியல் செங்கோட்டையன் போன்றவர்.
இவருக்கு அது... அது அவருக்குதான் வெட்கக்கேடு. எங்களுக்கு ஒன்னும் கிடையாது.
இந்த இயக்கத்துல இருந்து இப்படி எல்லாம் அவர் இவ்வளவு மூத்தவர் பேசிட்டு இருக்கிறது. சோ அத நாம தள்ளிடுவோம்.
இவங்க சொல்றாங்க இன்னொன்னு அன்னைக்கு கரூர் விவகாரத்துக்குதான் போல சரி விட்ருங்க.
இவங்க... இவர் ஃபர்ஸ்ட் காஞ்சிபுரம் ஒரு மாநாடு... ஒரு மீட்... மாநாடு ஒன்னு போடுறாரு. பீப்பிள சந்திக்கிறாரு விஜய்.
அப்பயே ரெண்டு பேர் இறந்தாங்கல்ல? நம்ம எல்லாமே பார்த்தோமே.
அதுல ஒருத்தர் இறந்தாரு வரும்போதும் போகும்போதும் இன்னொருத்தர் இறந்தாரு.
அதுக்கு இவர் என்ன ஆறுதல் சொன்னாரு? இல்ல என்ன பேசினாரு? இவங்க கட்சிக்காரங்க.
மக்களை கூட விட்ருங்க. பார்க்க வந்த ரசிகர்களை கூட விட்ருங்க நீங்க.
அதுக்கு இதுவரைக்கும் பதிலே சொல்லல. நம்ம எல்லாம் சொன்ன உடனே மீடியா எல்லாம் ஃபோகஸ் பண்ண உடனே
41 பேர் இறந்தாதான் நாலு நாள் கழிச்சு...
ஒரு பத்து நாள் கழிச்சு வீடியோ போடுவாரா? 72 நாள் கழிச்சு கூப்பிட்டு பார்ப்பாரா? இவரு ஒன்னு.
இன்னொன்னு அஜிதான்னு ஒரு பெண்மணி. நீங்க ஒரு இயக்கம் ஆரம்பிக்கிறீங்க. உங்க கட்சியில இருக்காங்க.
மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கலன்னு...
கார் முன்னாடி வராங்க. அந்த கார் தள்ளிட்டே போறீங்க? உள்ளதான் உட்கார்ந்திருக்காரு.
ஃப்ரண்ட்லதான் உட்கார்ந்திருக்காரு.
என்ன மறைஞ்சு உட்கார்ந்திருந்தாரா? இல்ல பங்களால எங்காவது பனையூர்ல பதுங்கி இருந்தாரா?
முன்னாடி சீட்ல உட்கார்ந்திருக்காரு. அந்த பொண்ணு எனக்கு இந்த மாதிரி பிரச்சனை இருக்குன்றது...
இல்ல உள்ள வாங்கன்னுலாம்... இல்ல நான் வந்து பேசுறேன்னு சொல்லலாம்.
ஏதாவது ஒரு வார்த்தை அந்த கண்ணாடிய இறக்கி பேசலாம்ல?
நேரா தள்ளிக்கிட்டே போறீங்க. அந்த பொண்ணு மயக்கம் வந்து விழுது. ஊர்ல போய் தற்கொலை முயற்சி பண்ணுது.
ஒரு உங்க தொண்டர். உங்களுக்காக உழைச்ச... நான் ஒரு கோடி ரூபாய்க்கு மேல செலவு பண்ணிருக்கேன்னு...
ஒரு பெண்கள் அரசியலுக்கு வர்றதுன்றது இன்ன வரைக்கும் ஒரு பெரிய விஷயமாதான் இருக்கு.
அதுல எதிர்த்து போராடுறது அப்படின்றது.
அப்படி இருக்கையில ஒரு பெண்மணி வந்தாரு. நான் ரெண்டு வருஷமா போராடிக்கிட்டு இருக்கேன் ஆரம்பிச்சதுல இருந்து.
இங்க உள்குத்து நடக்குது. உட்கட்சியில என்ன அவமானப்படுத்துறாங்கன்னு தற்கொலை முயற்சி வரைக்கும் போறாங்க.
இவங்க தலைவர் என்ன பேசினாரு? சரி கரூருக்கு பேச வேண்டாம்.
பொதுமக்கள் பிரச்சனைக்கு பேச வேண்டாம்.
தூய்மை பணியாளர் போராடுறாங்க. இன்னைக்கு சொல்றாரு நான் கிங் இல்ல கிங் மேக்கர் இல்ல.
எனக்கு ஒரு பிரச்சனைன்னாகூட நான் கவலைப்பட மாட்டேன். மக்கள் பிரச்சனைன்னா நான் கொதித்தெழுவேன்.
இதெல்லாம் மக்கள் பிரச்சனை இல்லாம யார் பிரச்சனை இதெல்லாம்?
இந்த தூய்மை பணியாளர், மாற்றுத்திறனாளிகள், இடைநிலை ஆசிரியர்கள், மருத்துவர்கள், நர்சஸ் எல்லாம் போராடிக்கிட்டு இருக்காங்களே
இத்தனை நாளு?
ஒரு அறிக்கை. நீங்க நேர வர வேணாம். அறிக்கை. இதெல்லாம் எப்படி கொடுக்க முடியும்?
ஒரு தலைவரோ என்றவர் யாருமே வந்து முதல்வரோ தலைவரோ டெய்லி பேசிட்டு இருக்க மாட்டாங்க.
டெய்லி மக்களை சந்திக்க சொல்லல.
பிரஸ்ன்றது அதுக்காகத்தானே இருக்கு? நீங்க எல்லாத்தையுமே ட்விட்டர்ல போட்டுட்டு இருந்தா
ஓட்டும் அதுலயே போட்டு போய்டுவாங்கல்ல? அப்ப வெற்றி பெற்று முதல்வரா எப்படி ஆயிடுவீங்க நீங்க?
End of transcript · 820 words
Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.