This video is no longer available. The transcript is still here.

கோவில் நிதி: கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகத் திட்டங்கள் குறித்து விவாதம்

5 min

0:00

அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய் அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அப்படின்னு ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கு.

0:11

இந்த கருத்தை பார்க்கும் பொழுது அறநிலையத்துறையே இருக்கக் கூடாது அப்படின்னு சொல்ற பாஜகவுடைய குரலாகத்தான் திமுக அரசு சொல்லுதா அப்படிங்கிற சந்தேகம் எங்களுக்கு வருது.

0:23

பாஜகவும் வலதுசாரிகளும் சொல்றது இதுதான். அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது.

0:31

அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க.

0:36

இதற்காக வழக்கும் தொடர்ந்திருக்காங்க. இந்த நிலைப்பாடு திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களோடு நிற்குமா?

0:45

இல்ல கல்வி நிறுவனங்களுக்கும் இந்த கண்டிஷன்ஸ் அப்ளை செய்யப்படுமா?

0:48

மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்.

0:52

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே, அறநிலையத்துறையைப் பொறுத்தவரைக்கும் கோவில்களின் வருமானம் கோவில்களுக்கான, கோவில்களில் வரக்கூடிய பக்தர்களுக்காக செலவிடப்படும் என்பதை நம்முடைய ஆளுநர் உரையில் இடம் பெற்றதுதான் அதனுடைய சாராம்சம்.

1:11

இன்னொன்று, சமீபத்தில் வெளியிடப்பட்ட திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள், அந்தப் பணிகள், துவங்கப்படாத பணிகள் நிறுத்தப்பட்டது என்பது, இந்தப் பணிகளைப் பொறுத்தவரைக்கும் நாம் ஆராய்ந்த வரைக்கும், அந்தக் கோவில்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,

1:29

பொதுமக்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகள், பொதுமக்கள், பக்தர்கள் வரப்போகுது அவர்களுக்குத் தேவையான அடிப்படையான கழிப்பறை வசதிகள் போன்ற இந்த வசதிகளை மேம்படுத்துவதை காட்டிலும், இவர்கள் கமர்சியலாக கோவில்களுக்கு திருமண மண்டபங்கள் கட்டுவதிலும்,

1:43

வணிக வளாகங்கள் கட்டுவதிலும், அதன் மூலமாக வருவாய் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு இந்தத் திட்டங்களைத் துவங்கியதன் காரணமாக, மேலும் அதன் மீது பல்வேறு நீதிமன்ற வழக்குகள், ஸ்டே ஆர்டர்ஸ் இருப்பதனால நாம் அதையெல்லாம் ரத்து செய்து அறிவித்திருந்தோம்.

1:59

இதற்கு ஒரே ஒரு உதாரணமாக, எந்த அளவிற்கு கோவில்களை வந்து கமர்சியலாக மாற்றுவதற்கு கடந்த ஆட்சிக் காலத்தில் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பதற்காக ஒரே ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் சொல்லிடறேன்.

2:15

(Pause) குன்னூரில் இருக்கக்கூடிய அருள்மிகு விநாயகர் திருக்கோவில்.

2:22

ஏறத்தாழ அந்தக் கோவில்களில் இருந்து கோவில் நிதியைப் பயன்படுத்தி 10 கோடி ரூபாய்க்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை அந்தக் கோவிலுக்கு ஏற்படுத்துவதற்கான திட்டத்தை இந்த அரசு வந்து அனுமதித்திருக்கிறது.

2:36

இதற்கு முன்னால் இருந்திருக்கக்கூடிய அமைச்சர் அவர்கள் அதை அறிவித்திருக்கிறார்கள்.

2:40

அந்தக் கோவில்ல ஒட்டுமொத்தமாக மாதத்திற்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையே 500 தான் ஆவரேஜா.

2:47

அதேபோல அந்தக் கோவில்களுக்கு அடிப்படையில கழிப்பறை வசதி கூட கிடையாது.

2:51

இதுமட்டுமில்ல, குன்னூர் மற்றும் உதகையைச் சுற்றி இருக்கக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் இருக்கக்கூடிய 50 கோவில்கள்ல பேசிக்கா இருக்கக்கூடிய டாய்லெட் பெசிலிட்டிஸ் கூட அங்க இருக்கக்கூடிய கோவில்களுக்குக் கிடையாது.

3:05

அப்படிப்பட்ட இடங்கள்ல கோவில் நிதியைப் பயன்படுத்தி எதற்காக மல்டி லெவல் கார் பார்க்கிங் தேவைப்படுது?

3:12

அப்ப இது கமர்சியல் திட்டங்கள் இல்லையா? கோவில் நிதியை வந்து இப்படி கமர்சியலாக பயன்படுத்துவதற்கு எதிராகத்தான் நாம் இந்தத் திட்டங்களை எல்லாமே தடுத்து, இந்தத் திட்டங்கள் தேவையில்லை, அதற்குப் பதிலாக நம்முடைய அரசாணையிலேயே வெளியிட்டிருக்கிறோம்.

3:26

மிகத் தெளிவாக கடைசி வரியைப் படித்துப் பார்த்தால் எல்லாருக்கும் தெரியும்.

3:30

இந்தக் கோவில் நிதியைப் பயன்படுத்தி கோவிலும் பக்தர்களும் பயன்படக்கூடிய வகையில மாற்றுத் திட்டங்களை உருவாக்குவோம்ன்ற வரியையும் நம்ம மென்ஷன் பண்ணியிருந்தோம்.

3:40

எந்த இடத்திலேயுமே மக்கள் பயன்படக்கூடிய கல்வி நிலையங்களையோ இல்ல இது போன்ற மருத்துவ வசதிகளையோ நாம செய்து தரமாட்டோம்னு சொல்லல.

3:48

இன்னும் சொல்லப்போனா, கடந்த ஐந்து ஆண்டுகாலத்துல ஒன்றிய அரசின் நிதி உதவியோடு பழனியில பார்த்தீங்கன்னா ஒரு சித்த மருத்துவமனை கட்டுவதற்கான நிதி உதவியை ஒன்றிய அரசு தருவதற்குத் தயாராக இருந்தது.

4:02

ஆனால் கடந்த ஆட்சியில அந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுட்டு, கேட்டா ரெக்கரிங் செலவை எங்களால ஏத்துக்க முடியாது அப்படின்னு சொல்லி கிடப்பில் போட்டு வச்சிருந்த இந்தத் திட்டத்தை நாம இன்றைக்குக் கையில் எடுத்து அதைத் துவங்குவதற்கான ஆய்வில் இறங்கியிருக்கிறோம்.

4:15

அப்ப எந்த இடத்திலேயுமே மக்கள் பயன்படக்கூடிய திட்டங்களை நாம தடுக்கவும் இல்லை, நாம யாருக்கும் பி டீமாக இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

4:24

கோவில்களின் நிதியை ஒருகாலமும் கமர்சியலாக பயன்படுத்த வேண்டிய அவசியமும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திமுகவின் ஆட்சிக்குத் தேவையும் இல்லை.

End of transcript · 433 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal