Tamil transcript
நீ என்னம்மா பிஜேபி வந்துரும் பிஜேபி வரக்கூடாது காங்கிரஸ் வரலாமா
இந்த நாட்டில் தமிழ் மக்கள் படுகிற அவ்வளவு துயரத்திற்கும் காரணம் யாரு
காங்கிரஸ்
ஐநூறு டிஎம்சி நானூத்தம்பது டிஎம்சி வந்துகிட்டு இருந்த தண்ணி
காவிரில வந்துகிட்டு இருந்த தண்ணியை தரவிடாம தடுத்தது யாரு
வழக்கு போட்டது ஐயா கருணாநிதி
அந்த வழக்கை திரும்பப் பெறுங்கன்னு மிரட்டி அந்த வழக்கை திரும்பப் பெற வச்சது யாரு
அம்மையார் இந்திராகாந்தி
கச்சத்தீவை தான்தோன்றித்தனமா எடுத்து சிங்களவனுக்கு தாரை வார்த்து கொடுத்தது யாரு
இந்தியாவோடதா அந்த நிலப்பரப்பு
என்னுடையது என் பாட்டன் சேதுபதி உடையது எடுத்துக் கொடுத்தது யாரு நீங்க
ஒரே ராத்திரில சிறிமாவோ பண்டாரநாயக்கா சாஸ்திரி கையெழுத்து போட்டு
என் மக்களை நாடற்றவனா ராத்திரில இறக்கி விட்டவன் யாரு நீ
இந்த நிலத்துல இருக்கிற நச்சுத் திட்டம் அணு உலை ஸ்டெர்லைட்
மீத்தேன் ஈத்தேன் எல்லாத்தையும் கையெழுத்து போட்டு கொடுத்தது யாரு நீ
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு தூக்கிட்டு போனது யாரு நீ
அப்புறம் நீ வந்து புதுசா என்னமோ எங்களுக்கு எல்லாம் நல்லது செய்யப் போற
நல்லது செய்யப் போற என்ன செய்யப் போற
முதல் முதலா அந்த நாட்டுல இந்திய திணிச்சு இந்த நாட்டுல என் தாய்மொழி அழிக்கத் துடிச்சது நீ
என்ன சொல்லுங்க ஏதாவது சொல்லுங்க
என்ன நீ இதுல இருந்து மாறுபட்டுட்ட
அப்ப பிஜேபி வரக்கூடாது காங்கிரஸ் வரலாமா
ஒரு தேசிய இனத்தின் விடுதலைக் கனவை அழிச்சு நாசமாக்குன கட்சி காங்கிரஸ்
கண்ணு முன்னாடி என் இனத்தை கொன்று குவிச்ச கட்சி அதிகாரம் காங்கிரஸ்
சிங்களனுக்கு கனவில் கூட எண்ணம் வராது தமிழர்களை வென்று விட முடியும்னு
அவனுக்கு இரு கரமும் கொடுத்து வட்டி இல்லாத கடனா எண்பதாயிரம் கோடியை கொட்டிக் கொடுத்து
ஆயுதம் கொடுத்து பயிற்சி கொடுத்து போர்க்கப்பலை கொடுத்து என் மக்களை அழித்து ஒழிக்க வைத்தது
இந்த காங்கிரஸ் கட்சி அதன் ஆட்சி
கூட நின்னது இந்த திமுக
நீங்க போய்கிட்டு இருக்கீங்க
இந்த காங்கிரஸ் கட்சி இனத்தை கொன்று குவிச்ச காங்கிரஸ் வரலாம்
அது எப்படி அனுமதிக்கிற ரெண்டு பேருமே வரக்கூடாதுன்னு சொல்லு
அப்பத்தான் நீ ஆண்மகன் இந்தியக் கட்சி எதுக்குன்னு கேள்
சரி பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு காவிரில
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு
முல்லைப் பெரியாற்றுல காங்கிரஸ்
இல்ல கச்சத்தீவு மீட்புல ரெண்டு கட்சிக்கும் வேறுபாடு
ஏதாவது ஒன்னு சொல்லுங்க
ஒன்னு சொல்லுங்க எந்த இடத்துல பாரதிய ஜனதாவையே பேசுறியே காங்கிரஸ் வரலாமா
ஏன் அதை கூட்டிட்டு வர
அதாவது என் இனத்தை கண்ணு முன்னாடி கொன்னு குவிச்சுட்டு
அதே இனத்துல வாக்கை பெற்று வலிமையான அதிகாரத்துக்கு ஆட்சிக்கு வந்துற முடியும்னா
நாங்க மானங்கெட்ட கூட்டம் ஆயிட்டோம்னுதானே நீ மஞ்சக் குளிக்கிற நீ
வேற எப்படி
வேற எந்த கன்னடனை கொன்னுட்டு அல்லது ஆந்திராவுல தெலுங்கரை கொன்னுட்டு
மலையாளியை கொன்னுட்டு நீ இப்படி அந்த மாநிலத்துல ஒரு ஓட்டு வாங்கிட முடியுமா
வாங்கிட முடியுமா சொல்லுங்க
திரும்பத் திரும்ப அவனை கூட்டி வந்துட்டு பிஜேபி வந்துரும் காங்கிரஸ் வரலாம்
ஏன்னா என் இனத்தை கொன்னு குவிச்சான்ல
என் விடுதலைக் கனவை பொசுக்கி நாசமாக்குனான்ல அதனால வரலாம்
ஐபிகேஎஃப் அனுப்பி என் இன மக்களை அழிச்சு ஒழிச்சாங்கள்ல அது வரலாம்
காவிரி நதிநீர் உரிமை பறிபோக வச்சாங்கள்ல வரலாம்
கச்சத்தீவை எடுத்து அது கொடுத்தது கொடுத்ததுதான்னு சொன்னான் அதனால வரலாம்
என்ன இது என்ன இது
எத்தனை காலத்துக்கு இதையே பேசித் திரிவீங்க தம்பி
எத்தனை காலத்துக்கு இதையே பேசித் திரிவாங்க இவங்க
ஒரே ஒரு காங்கிரஸ் கட்சி தலைவரை
இந்த பாரதிய ஜனதாவுல இருந்து இந்த இடத்துல நாங்க மாறுபடுறோம்
அது மதவாதக் கட்சி நீ மிதவாதக் கட்சியா
அவன் வி ஆர் ஆல் இந்துஸ்ம்பான் நீ எஸ் வி ஆர் ஆல் இந்துஸ்ம்பான்
வேற அவன் சவுண்டு இந்துத்துவா நீ சாஃப்ட் இந்துத்துவா
வேற என்ன சொல்லுங்க நூறு விழுக்காடு இந்துக்கள் பிஜேபி
தொண்ணூறு விழுக்காடு இந்துக்கள் திமுக
நான் சொல்லல தலைவரே சொல்றாரு என் கட்சியில தொண்ணூறு விழுக்காடு இந்துக்கள்னு
இது பிஜேபியின் பி டீமா நாங்க பி டீமா ஏய் சொல்லுங்கப்பா
ஏன்னா என்ன எத்தனை காலத்துக்கு இந்த ஃப்ராடு இந்த புளுகுணி வேலையை செஞ்சுகிட்டு வண்டி ஓட்டிகிட்டு இருப்பீங்க
ஒரு வீர மகனா நின்னா நீ கவலைப்படாம இரு
வரமாட்டான் நான் இருக்கேன் அப்படி சொல்லு
வந்துருவான் வந்துருவான் இதை சொல்றதுக்கு
வந்த பிறகு என்ன பண்றது வாத்தியாருக்கு சம்பளம் கொடுக்க முடியல எல்லா காசையும் வச்சுகிட்டு தரமாட்டேங்குது
இந்த புலம்புறதுக்கு ஒரு அதிகாரம் நாற்பது பாராளுமன்றம்
அதுக்கு ஒரு ஆட்சி
ஏய் என் காசை தரலைன்னா உனக்கு எதுக்குடா நான் வரி கொடுக்கணும் ஜிஎஸ்டி கிடையாதுடா தரமுடியாதுடா சொல்லமுடியாது
சொன்னா என்ன ஆகும் ஈடி
அப்புறம் வாரேன் ஓடி
வெரி சாரி மோடி இதானே
இது ஒரு கேவலம் இது ஒரு கட்சிகள் ஆட்சிகள் இதுக்கு
End of transcript · 524 words