Tamil transcript

அப்பேர்ப்பட்ட பெண்ண கைத்தலம் பிடிக்க போற.

அதாவது பாணிக்கிரகணம்னு பேரு. சந்திர கிரகணம், சூரிய கிரகணம் அப்படின்றதெல்லாம் வந்து பிடிக்கும்,

ஒரு ரெண்டு மணி நேரத்துல விட்டுட்டு போயிடும். இந்த பாணிக்கிரகணம் இப்ப பிடிக்கிறோம் பாத்தியா, இது ஆயுசுக்கும் விடாது.

சரியா? எப்படி? எப்படி? ஆயுசுக்கும் விடாது.

சரியா? அதனால இப்ப பிடிக்கிற கைய கெட்டிமா புடிச்சுக்கணும்.

சரியா? சும்மா கை காட்டுறா, வலது கை காட்டுறா.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்.

சரியா? இந்த பஞ்சபூதமும் பெண்ணுக்குள்ள அடக்கம். பெண் பேணும் தன்மை உடையவள்.

பெண் வந்து பாதுகாக்க மாட்டா. அவ வந்து கட்டி அரவணைச்சுட்டு கொண்டு போவா அந்த குடும்பத்த.

ஆனா ஆண் எப்பேர்ப்பட்டவன்னாக்கா ஆளும் தன்மை கொண்டவன்.

சரியா? அதனாலதான் அவனுக்கு ஆண்மகன்-னு பேரு. ஆளும் தன்மை உடையதால அவனுக்கு ஆண்மை-னு பேரு.

சரியா? அப்ப நான் அவள பாதுகாப்பேன் அப்படின்றதுக்காக இப்படி பிடிக்கணும் கைய. புடி பாப்போம்.

ஆ... இப்ப பிடிச்ச கைய ஷாப்பிங் மால் போனாலோ, சினிமா தியேட்டர் போனாலோ,

டி.நகர் போனாலோ, ஜி.ஏ.ரோடு போனாலோ, எம்.சி.ரோடு போனாலோ விட்றக்கூடாது.

கெட்டிமா...

கெட்டிமா புடிச்சுக்கணும். சரிங்களா?

இருபத்தொன்பது வருஷமா ஐயிரண்டு திங்களாய் அடிவயிறு நொந்து பெற்று

இவ்வளவு பெரிய ஆளா வளர்த்து, குட் ஹாபிட்டோட...

ஓகேவா? ஆமா தானே. குட் ஹாபிட்டோட கிளீனா ஒரு பையன...

யாருகிட்ட ஒப்படைக்கிறோம்? உன்கிட்ட ஒப்படைக்கிறோம்.

அத நீ எப்படி பாத்துக்கணும்?

கண்ண இமை காக்குறா மாதிரி தனுஷ பாத்துக்கணும்.

குழந்தைய வெங்காயம்லாம் உரிக்க விடக்கூடாது.

கண்ணுல இருந்து தண்ணி வரக்கூடாது எங்க குழந்தைக்கு.

சரியா? ஏதாவது வேணும்னாக்கா நீ ஆர்டர் பண்ணி சாப்பிடு. குழந்தைய சமைக்க சொல்லாத.

ராஜா? உனக்கு பாடத் தெரியலன்னா உன் சம்சாரத்துகிட்ட கேளுப்பா.

ஆ பாடுமா.

நம்ம பாட்டுதான் பாடுங்க. பாடுனாதான் நான் முடிப்பேன் இல்லன்னா முடிக்க மாட்டேன். சீக்கிரம் ஃபாஸ்ட்டா.

பாடுனாதான் வேகமா... இல்லன்னா குழந்தை வெளியில எகிறி குதிச்சுரும்.

பாடணும். பாடலன்னா முடிக்க மாட்டேன் நானு.

எனக்கு பாட சொல்லல, பாப்பாக்கு பாட சொன்னேன்.

தாலேலோ தாலேலோ...

End of transcript · 220 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.