0:00

ஒரு பெண் IAS அதிகாரிக்கு ஆளுங்கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு அருள் விக்னேஷ்.

0:12

அவர் என்ன பண்ணிருக்காரு? தொடர்ந்து ஆபாச message அனுப்பிச்சிருக்காரு. யாருக்கு?

0:17

மாவட்ட ஆட்சித்தலைவருக்கு. தமிழ்நாட்டுடைய வரலாற்றிலே இல்லைங்க.

0:21

இந்தியாவுடைய வரலாற்றிலேயே இப்படியொரு கேவலமான விஷயம் எங்கயுமே நடந்தது கிடையாது.

0:26

ஒரு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆபாச message அனுப்புறாரு.

0:32

குடிச்சிட்டு அவங்க வீட்டுக்கு, camp office போய்த் தகராறு பண்ணியிருக்காரு.

0:36

ரகளையில் ஈடுபட்டிருக்காரு. இதுல எப்ப நடந்ததுன்னு பார்த்தீங்கன்னா, இவங்க ஆட்சிக்கு வந்ததே மே 10ஆம் தேதி.

0:43

ஜூலை மாசமே நடந்திருக்கு. நம்மள ஆட்சிக்கு வந்தவுடனே இந்த அரசு சொல்லுவோம், honeymoon period அப்படின்னு சொல்லுவோம்.

0:49

ஆறு மாசம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது.

0:52

நம்ம honeymoon period ன்னு சொல்றத இந்த சட்டமன்ற உறுப்பினர், இந்த முதலமைச்சர் எல்லாம் அதே அர்த்தத்திலயே எடுத்துக்கிட்டாங்க. literally honeymoon periodன்னு நினைச்சுக்கிட்டாங்க.

1:04

ஜூலை மாதம் 31ஆம் தேதியிலிருந்து இந்த news வந்து நடந்திருக்கு. இந்தச் சம்பவம் நடந்திருக்கு.

1:13

தொடர்ந்து இதைப் பத்தி பத்திரிகையாளர்கள், social media எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.

1:19

எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் முதல்ல இந்த news சொல்றாங்க.

1:28

ஆனா தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர், நீங்கப் பத்திரிகையாளர்களும் போயி இந்தச் சங்கீ அமைச்சர், பொய் சொல்றதுக்குனே ஒரு அமைச்சர் வச்சிருக்காங்க.

1:34

அவர் போய்க் கேட்கும்போது சம்பந்தம், சம்பந்தம் இல்லாம பொய் சொல்றதையே வந்து பழக்கமாக வச்சிருக்கக்கூடியவர் அவர் பதில் சொல்றாரு.

1:45

116 நாட்கள் முன்னாடியே இந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவங்க தலைமைச் செயலாளர்கிட்ட புகார் அளிச்சிருக்காங்க.

1:57

தலைமைச் செயலாளர் என்ன பண்ணியிருக்காரு? அவங்ககிட்ட சொல்லியிருக்காங்க, நீ வந்து வேற district வாங்கிட்டு போயிருமா அப்படின்னு.

2:07

இதெல்லாம் இப்ப ஒண்ணொண்ணா தொண்டை தொண்டா இந்த விஷயங்கள் எல்லாம் வெளிய வந்துக்கிட்டு இருக்கு.

2:11

சம்பந்தப்பட்ட MLA மேல தொடர்ந்து எல்லாரும் இதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்.

2:15

கடந்த ஒரு மாசமாதான் இது வெளிய வந்து எல்லாரும் இதைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கிறோம்.

2:19

ஆனா அந்தச் சட்டமன்ற உறுப்பினர் மேல எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுக்கல.

2:23

இன்னைக்கு வரைக்கும் எடுக்கல. நேத்து கூட நீதிபதி நீதிமன்றத்துக்கு போனதுனாலதான் ஒரு சின்ன நடவடிக்கை, FIRயே பதிவு செய்யறதுக்கு 116 நாட்கள் ஆயிருக்கு. 116 நாட்களா?

2:40

சட்டம் ஒழுங்கு கையில வச்சிருக்கக்கூடிய இந்த முதலமைச்சர், நம்பி முதலமைச்சர் தூங்கிட்டு இருந்தாரா அப்படிங்கிறத பத்திரிகையாளர்கள் வாயிலாக மக்கள்கிட்ட கேட்க நான் விரும்புகிறேன்.

2:52

அது மட்டுமில்ல, குற்றச்சாட்டு வெளியில வந்ததுல இருந்து இந்த online abusers, virtual warriors சொல்லப்படுகின்ற இந்த online abusers பாதிக்கப்பட்ட நபரை தாக்கி தரக்குறைவா விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க.

3:06

நான் இன்னைக்கு DGP அவர்களிடம் கொடுத்திருக்கக்கூடிய அந்த புகார் மனுவுல குற்றத்தை மறைச்ச தலைமைச் செயலாளர், ஏன்னா அவருக்கு ஜூலை 31ஆம் தேதியே கொடுக்கப்பட்டிருக்கு.

3:19

அவரை அவர் மூடி மறைக்க முயற்சி பண்ணியிருக்காரு. போய் வேலை பார்த்திருக்காரு.

3:25

IAS கிட்ட அந்தப் பாதிக்கப்பட்ட ஆட்சி, அவங்க மாவட்ட ஆட்சியரை போய் சொல்லியிருக்காரு, நீ வந்து district மாத்திட்டு போயிருப்பா, மூடி மறைச்சிடலாம் அப்படின்ற அளவுக்குப் பேசியிருக்காரு.

3:35

அவர் மேல நடவடிக்கை எடுக்கணும். அவரை accused சேர்க்கணும்.

3:39

தலைமைச் செயலாளரை accused சேர்க்கணும். நான் இன்னும் கேட்க விரும்புவது, தலைமைச் செயலாளர் இந்த விஷயத்தை முதலமைச்சர் கிட்ட சொன்னாரா இல்லையா?

3:51

சொல்லனாலும் மிகப்பெரிய தவறு. அப்படி சொல்லியிருந்தாருன்னா, முதலமைச்சர் ஏன் 116 நாட்களா இன்னைக்கு வரைக்கும் வாயைத் திறக்காம இருக்காரு?

4:05

அவருக்குப் பயம் இருக்கலாம். ஏதாவது கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினரை கூப்பிட்டு கேள்வி கேட்டு, சட்டமன்ற உறுப்பினரை நீ என்ன ஒழுங்கான்னு முதலமைச்சரை பார்த்து கேட்டுடலாம்ல்ல?

4:16

அதனால கேட்காம இருக்கலாம். ஆனா தமிழ்நாட்டு மக்கள் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

4:22

இப்படிப்பட்ட சம்பவமே நடக்கலைன்னு சில அமைச்சர்கள் முட்டு கொடுத்துட்டு இருந்தாங்க.

4:26

இப்ப அவங்க எல்லாம் என்ன பதில் சொல்லப் போறாங்க?

4:29

அதே மாதிரி இன்னொரு சம்பவம். சில பேர் பார்த்தோம்.

4:34

துணைச் சபாநாயகர் திரு ரவிஷங்கர் அவர்கள் தன்னுடைய வீட்டுக்கு மனு கொடுக்க வந்தவரை கண்ணாப்பண்ணுன்னு அடிச்சு அந்த video viral ஆகி, உடனே விடிய விடிய நடு ராத்திரில அவரை கூப்பிட்டு உட்கார வச்சு, அவருக்குத் திருப்பி அடி படாதபடி makeup எல்லாம் போட்டு,

4:52

அவர் பக்கத்துல உட்கார வச்சு, இவரு உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு ரெண்டு பேரும் நண்பர்கள் மாதிரி பேசின videoவும் வெளிவந்தது.

4:58

அதன் பிறகு திருப்பி ரெண்டு, மூணு மணி நேரத்துல அவர் மீண்டும் என்னை இந்த மாதிரி கூப்பிட்டு மிரட்டி video எடுத்துட்டாங்க.

5:03

துணைச் சபாநாயகர் அடிச்சது உண்மை அப்படின்னு பேட்டி கொடுத்திருக்காரு.

5:08

அந்த சம்பவம் நடந்து இதுவரைக்கும் 16 நாட்கள் ஆகுது.

5:11

அதன் மேலயும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

5:14

எனவே துணைச் சபாநாயகர் மேலயும் காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்னு புகார் மனுவுல சொல்லியிருக்கிறோம்.

5:24

எனவே இந்த அரசு 116 நாட்களாக தூங்கிக்கிட்டு இருக்கக்கூடிய இந்த விடியா அரசு, தூங்கமுஞ்சிய அரசு, தூங்கமுஞ்சிய முதலமைச்சர் எந்திருச்சு, சட்டம் ஒழுங்கு அவர்கிட்டதான் இருக்கு, ஒழுங்கா நடவடிக்கை எடுக்கணும் அப்படிங்கிற இந்த புகார் மனுவை,

5:41

அதே மாதிரி இந்த வழக்கை தானாக முன்வந்து CBI கொடுக்கணும்.

5:45

ஏன்னா இவங்க அத்தனை பேரும் இந்தக் குற்றச்சாட்டை, இந்தக் குற்றத்தை மறைக்கிறதுக்கான முழு வேலையில ஈடுபட்டிருக்காங்க கடந்த நான்கு மாதங்களாக.

5:53

எனவே இந்த அரசின் மீது எங்களுக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை.

5:56

முதலமைச்சர் மீது துளியும் நம்பிக்கை இல்லை.

5:59

எனவே இதை உடனடியாக CBI மாத்தணும். இந்த MLAகை கைது செய்யணும்.

6:05

துணைச் சபாநாயகரையும் அவரையும் கைது செய்யணும் அப்படின்னு எங்களுடைய கோரிக்கையை மனுவாக கொடுத்திருக்கிறோம்.

End of transcript · 589 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal