இறைவன் எங்கே இருக்கிறார்? பாலையும் தீபத்தையும் கொண்டு சிறுமியின் விளக்கம்

3 min Faith

0:03

இறைவன் எங்கே இருக்கிறான்? அதுதான் என் முதற் கேள்வி.

0:10

மன்னா, இந்த பொற்கிண்ணத்தில் என்ன இருக்கிறது?

0:14

பொற்கிண்ணத்திலே பசுவின் பால் இருக்கிறது.

0:18

அந்த பாலுக்குள்ளே என்னென்ன இருக்கிறது? பாலுக்குள்ளே மோர், தயிர், வெண்ணெய், நெய் அனைத்தும் இருக்கிறது.

0:25

அது எங்கே இருக்கிறது என்று சுட்டிக்காட்டுங்கள்.

0:28

அது... அது... அதுக்குள்ளே இருக்கிறது. ஆஹா! அப்படி சொன்னால் போதாது.

0:39

பாலுக்குள்ளே நெய், தயிர், வெண்ணெய், மோர் எங்கே இருக்கிறது என்று தனித்தனியாக சுட்டிக்காட்ட வேண்டும்.

0:45

ஹஹ்! இது என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி? அதற்குள்ளே எல்லாம் அடங்கி இருக்கிறது.

0:50

அப்படித்தானே! ஆண்டவன் எல்லா இடத்திலும் அடங்கி இருக்கிறான்.

0:56

இது புரியாமல், தாத்தாவிடம் இறைவன் எங்கே இருக்கிறான் என்று ஒரு கேள்வியைக் கேட்டீர்களே, இதற்கு எப்படி பதில் சொல்வது?

1:10

கண்முன்னே நிற்பது குழந்தையா? அல்லது குழந்தை வடிவிலே வந்த பெண்குலத்தின் தெய்வமா?

1:16

இல்லை, தெய்வத்தின் நாடகமா? அந்த நாடகத்தின் தத்துவத்தை விளக்க வந்த நாமகளின் பாத்திரமா?

1:23

அதற்குள் யோசிக்கப்பட வேண்டாம். மன்னா, மன்னா, அடுத்த கேள்வியைக் கேட்கலாம்.

1:32

இறைவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் என்னுடைய இரண்டாவது கேள்வி அம்மா.

1:39

இது என்ன? - தூங்கா விளக்கு. இந்த விளக்கிலே சுடர்விட்டுக் கொண்டிருப்பது என்ன? - அணையா தீபம்.

1:47

இந்த தீபம் எந்த திசையை நோக்கி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா?

1:54

அது எப்படி முடியும்? எரியும் விளக்கிலே இருக்கும் தீபம் நாற்புறமும் ஒளியிட்டு பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும்.

2:00

அது எந்த திசையை நோக்கி பிரகாசிக்கிறது என்று கேட்டால், அதற்கு எப்படி பதில் கூற முடியும்?

2:06

அப்படித்தானே! இறைவன் எல்லா திசைகளையும் நோக்கிக் கொண்டிருக்கிறான்.

2:11

இது புரியாமல், எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான் என்று கேட்டால், இதற்கு எப்படி பதில் சொல்வது?

2:17

ஆண்டவா! அரசனை குழந்தையாக்கி, குழந்தையை தெய்வமாக்கிக் கொண்டிருக்கிறாயே!

2:23

இச்சிறு பெண்ணிடமிருந்து விடைகளை நீயே சொல்வது உண்மையானால், என்னுள்ளிருந்து வினாக்களைக் கேட்க வைத்ததும் நீதானே!

End of transcript · 198 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal