மதுரை சுல்தான்கள் வரலாறு: மாலிக் காஃபூர் முதல் குமார கம்பணர் வரை
2 min About India History & how-to
2 min About India History & how-to
1310 ஆம் ஆண்டு பாண்டிய மன்னர்களுக்கிடையில் ஒரு சகோதரத்துவத்தை வருது.
வீரபாண்டியனும் சுந்தரபாண்டியனும் மதுரையை யார் ஆள்றதுன்னு சொல்லி அடிச்சுக்கிறாங்க.
இதுல சுந்தரபாண்டியன் மதுரையை விட்டே விரட்டப்படுறார்.
டெல்லி சுல்தானான அலாவுதீன் கில்ஜி கிட்ட உதவிக்கு போறார்.
அலாவுதீன் கில்ஜியும் மாலிக் கஃபுரை சுந்தரபாண்டியனோட மதுரைக்கு அனுப்புறார்.
மதுரைக்கு வந்த மாலிக் கஃபுர் சுந்தரபாண்டியனை அடிச்சு விரட்டிட்டு மதுரையை ஃபுல்லா பயங்கரமா loot பண்றார்.
250 டன் gold, 500க்கும் மேற்பட்ட யானைகள், பல குதிரைகள், பல கோயில்கள் இடிக்கப்படுது.
பல சொத்து சூறையாடப்படுது. 1311 ஆம் ஆண்டு மதுரையை ஆள்றதுக்கு governors டெல்லியிலிருந்து நியமிக்கப்படுறாங்க.
இவங்க எல்லாமே Turkish, Iran, Afghan backgroundல இருந்து வந்தவங்க.
1335 ஆம் ஆண்டு ஜலாலுதீன் அசன் கான் அப்படிங்கிற ஒரு மதுரை சுல்தான் டெல்லிக்கு எதிரா rebel பண்ணி மதுரையை தனி நாடா அறிவிக்கிறார்.
மதுரை சுல்தான்கள் ஆட்சியில பல மன்னர்கள் வந்திருக்காங்க.
ஆனா நாலாவது வந்த சுல்தான் தம்கானி மிகக் கொடூரமான ஒரு ஆட்சியாளர் அப்படின்னு பல historians சொல்றாங்க.
முக்கியமா இபின் பதூதா அப்படிங்கிற ஒரு Moroccan traveler இவரைப் பத்தி என்ன எழுதி இருக்கிறாருன்னா, பல கொடூரமான riots நடந்திருக்கு.
கொலைகள் நடந்திருக்கு. கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கு.
கொடுங்கோலான ஒரு ஆட்சியை நடத்தியவர் தான் இந்த தம்கானி அப்படின்னு சொல்லியிருக்காரு.
இபின் பதூதா யாருன்னா, மதுரை சுல்தான்கள் ஆட்சியை நிறுவின அசன் கானோட மாப்பிள்ளை தான் இபின் பதூதா.
இப்படி போயிட்டு இருக்கிற ஆட்சியைப் பார்த்த ஹொய்சாலர்களும், விஜயநகரப் பேரரசும் மதுரை சுல்தான்கள் மேல மிகப்பெரிய கோபத்துல இருக்காங்க.
1300களின் முதல் பாதியில் சுல்தான்களின் ஆட்சி மதுரையில் போயிட்டு இருக்கு.
சிதம்பரம், திருவண்ணாமலை, மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் போன்ற கோயில்கள் செயல்பாடற்றிருந்தது.
இதைப் பார்த்த ஹொய்சால மன்னரான வீர பல்லாளத்ரி கோபப்படுறார்.
1340கள்ல சுல்தான்களை எதிர்த்துப் போர் செய்கிறார்.
வீர பல்லாளாவை கண்ணனூர் அப்படிங்கிற இடத்துல சுல்தான்கள் தோற்கடிக்கிறாங்க.
தோலை உரிச்சு தொங்க விடுறதை நாம சொல்லுவோம்ல, அதை வீர பல்லாளாவுக்கு செய்றாங்க.
மதுரை கோட்டையில உயிரோட தோலை உரிச்சு தொங்க விடப்பட்டார் வீர பல்லாளர்.
இதைப் பார்த்த பல மன்னர்கள் பயந்தாங்க. ஒரு சில மன்னர்கள் பலி வாங்கணும்னு நினைச்சாங்க.
அப்படி நினைச்சவர் தான் குமார கம்பண ராயர் அப்படிங்கிற விஜயநகரப் பேரரசர்.
விஜயநகரப் படைக்கும் மதுரை சுல்தான்களின் படைக்கும் 1370கள்ல போர் தொடங்குது.
வட தமிழகத்துல தொடங்கின அந்தப் போர் முதல்ல திருவண்ணாமலை கோயிலை குமார கம்பண ராயர் மீட்கிறார்.
அதுக்கப்புறம் 1378ல திருபுரங்குன்றத்துல சிக்கந்தர் ஷா அவர்கள் விஜயநகரப் படையால் தோற்கடிக்கப்படுறார்.
இப்படி தான் மதுரை சுல்தான்களின் ஆட்சி முடியுது.
விஜயநகரப் பேரரசு தமிழ்நாட்டுக்குள்ள வருது.
ஒரு சில பேர் சிக்கந்தர் ஷா திருபுரங்குன்றத்துல கொல்லப்பட்ட இடத்துல 1800கள்ல தர்கா கட்டப்பட்டதா நம்புறாங்க.
ஒரு சிலர் அவரோட remains கோரிப்பாயலுக்கு கொண்டு போகப்பட்டதாகவும் நம்புறாங்க.
இது தான் திருபுரங்குன்றத்தைச் சுற்றியுள்ள வரலாறு.
இந்த வரலாறை எல்லாருக்கும் share பண்ணுங்க.
End of transcript · 313 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.